முந்தானை முடிச்சு

முந்தானை முடிச்சு 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது நடிகை ஊர்வசி அறிமுகமான திரைப்படம்.

முந்தானை முடிச்சு
250 px
இயக்கம்கே.பாக்கியராஜ்
தயாரிப்பு
கதைகே.பாக்கியராஜ்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடு1983
மொழிதமிழ்

ஊர்வசிக்கு முதல் திரைப்படம். இத்திரைப்படம் 22 ஜூலை 1983 இல் வெளியிடப்பட்டு ஒரு பெரிய வெற்றித் திரைப்படமானது. 3 மில்லியன் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 40 மில்லியனை ஈட்டியது. திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேலாக திரையிடப்பட்டு வெள்ளி விழா படமானது. பாக்கியராஜ் அவரது நடிப்பிற்காக, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இந்த படம் தெலுங்கில் மூடு முல்லு (1983), இந்தியில் மாஸ்டர்ஜி (1985), கன்னடத்தில் ஹல்லி மேஷ்ட்ரு (1992) என மறுஆக்கம் செய்யப்பட்டது.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] "அந்தி வரும் நேரம்" என்ற பாடல் மாயாமாளவகௌளை என்ற கருநாடக இராகத்திலும்,[3] "சின்னஞ்சிறு கிளியே" என்ற பாடல் சாருகேசி இராகத்திலும் அமைக்கப்பட்டது.[4] ஒலிச்சுவடில் ஆறு பாடல்கள் இருந்தன. அதில் ஐந்து பாடல்கள் மட்டும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.[5]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "அந்தி வரும் நேரம்"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:13
2. "சின்னஞ்சிறு கிளியே"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:18
3. "கண்ண தொறக்கணும்"  கங்கை அமரன்எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் 4:34
4. "நான் புடிச்ச மாப்பிள்ள தா"  புலமைப்பித்தன்எஸ். ஜானகி, எஸ். பி. சைலஜா 4:30
5. "வா வா வாத்தியாரே"  கங்கை அமரன்எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் 3:51
6. "வெளக்கு வெச்ச நேரத்தில"  நா. காமராசன்இளையராஜா, எஸ். ஜானகி 3:53
மொத்த நீளம்:
26:19

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முந்தானை_முடிச்சு&oldid=36713" இருந்து மீள்விக்கப்பட்டது