முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. முத்துப்பேட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முத்துப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,591 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,446 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 35 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
வேப்பஞ்சேரி • வங்காநகர் • வடசங்கேந்தி • வடகாடுகோவிலூர் • உப்பூர் • உதயமார்த்தாண்டபுரம் • தொண்டியக்காடு • தோலி • தில்லைவிளாகம் • த. கீழக்காடு • சங்கேந்தி • பின்னத்தூர் • பாண்டி • ஓவரூர் • மேலப்பெருமழை • மேலநம்மங்குறிச்சி • மருதவனம் • மாங்குடி • குன்னலூர் • கீழப்பெருமழை • கீழநம்மங்குறிச்சி • கற்பகநாதர் குளம் • கள்ளிக்குடி • ஜாம்புவானோடை • இடும்பாவனம் • எடையூர் • ஆரியலூர் • ஆலங்காடு • விளங்காடு