முதல் இடம்

முதல் இடம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விதார்த் நடிக்கும் இப்படத்தை குமரன் இயக்கினார். இத்திரைப்படம் ஏ.வி.எம். நிறுவனத்தின் 175 ஆவது திரைப்படம்.[1]

முதல் இடம்
இயக்கம்குமரன்
தயாரிப்பு
  • M.சரவணன்
  • M.S.குகன்
இசைஇமான்
நடிப்பு திருமுருகன்
ஒளிப்பதிவுபி.செல்லதுரை
கலையகம்ஏவிஎம் நிறுவனம்
வெளியீடுஆகத்து 19, 2011
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

மகேஷ் (விதார்த்) தஞ்சாவூரில் ஒரு குண்டர், உள்ளூர் காவல் நிலையத்தில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் தனது பெயரை முதலிடத்தில் வைத்து நம்பர் 1 குண்டராக வெளிப்படுவதே அவரது ஒரே லட்சியம். மகேசை தனது எதிரிகளுக்கு பயத்தை தருவதால், அவரது நண்பர்களால் 'யமகுஞ்சி' (இறந்தவர்களின் இளைய ஆண்டவர்) என்று அழைக்கின்றனர். அவர் தனது நோக்கத்தை அடைய அனைத்து சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகிறார்.

ஊருக்குள் தவறான வழியில் நடந்தாலும் அவரது தாய்க்கு (கலைராணி), அவர் பூமியில் சிறந்த மகனாக இருக்கிறார். கலைராணி இட்லி கடை நடத்தி தன் வாழ்வாதாரத்தை சம்பாதிக்கிறார். மனுக்காக வாழ்கிறார்.

பேருந்து நடத்துனர் பொன்னுசாமியின் (இளவரசு) மகளும் பள்ளி மாணவியுமான மைதிலியை (கவிதா நாயர்) மகேஷ் சந்திக்கிறார். மைதிலி, மகேசை காதலிக்க தொடங்குகிறார்கள்; இருப்பினும், பொன்னுசாமி அவர்களின் விவகாரத்தை எதிர்க்கிறார்.

அப்பகுதியில் நம்பர் ஒன் ரவுடியான கருப்பு பாலு (கிஷோர்) சிறையில் இருந்து வெளியே வரும்போது கதைகளம் ஒரு திருப்பத்தை அடைகின்றன. மகேஷ் எந்த தவறும் செய்யாமல் எம்.எல்.ஏ.வின் கோபத்திற்கு ஆளாகிறார். மைதிலி தனது வீட்டை விட்டு வெளியேறியதும், மகேஷ் பாலுவைக் கொல்ல நிர்ப்பந்திக்கப்படுவதும் விஷயங்கள் மாறுகின்றன. ஒரு வலுவான செய்தியுடன் படம் முடிகிறது

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார்.[2]

முதல் இடம்
Soundtrack
வெளியீடு2011
இசைப் பாணிஒலிச்சுவடு
மொழிதமிழ்
டி. இமான் காலவரிசை
தம்பிக்கோட்டை
(2011)
முதல் இடம்
(2011)
உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்)
(2011)
# பாடல்பாடல்கள் நீளம்
1. "அய்த்தானே"  டி. இமான், சின்மயி  
2. "இங்க வாந்தே"  ஹரிசரண், சுர்முகி ராமன்  
3. "முதல் இடம்"  ஃபெஜி, ரனைனா ரெட்டி, சாம் பி. கீர்த்தன், செந்தில்தாஸ் வேலாயுதம், வாசுதேவன்  
4. "பப்பரப்பே பப்ரப்பே"  பிரியா சுப்பிரமணியம், அனந்து, ஆலாப் இராசு  
5. "திண்டாடுகிறேன் நானே"  விஜய் யேசுதாஸ்  
6. "உய்யா உய்யா"  "திண்டுக்கல்லு" பூவிதா, வீரமணிதாசன்  

மேற்கோள்கள்

வார்ப்புரு:ஏவிஎம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முதல்_இடம்&oldid=36690" இருந்து மீள்விக்கப்பட்டது