முசிறி ஊராட்சி ஒன்றியம்
முசிறி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] முசிறி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முசிறியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, முசிறி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,879 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 23,894 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 41 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி மூன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அபினிமங்கலம்
- அய்யம்பாளையம்
- ஆமூர்
- ஏவூர்
- கரட்டாம்பட்டி
- காட்டுக்குளம்
- காமாட்சிப்பட்டி
- குணசீலம்
- கொடுந்துறை
- கோட்டாத்தூர்
- கோமங்கலம்
- சாத்தனூர்
- சித்தாம்பூர்
- சுக்காம்பட்டி
- செவந்தலிங்கபுரம்
- டி. புத்தூர்
- டி. புதுப்பட்டி
- திண்ணக்கோனம்
- திண்ணனூர்
- திருத்தலையூர்
- திருத்தியமலை
- நெய்வேலி
- புத்தானம்பட்டி
- புலிவலம்
- பெரமங்கலம்
- பேரூர்
- மண்பறை
- மூவானூர்
- வெளியனூர்
- வெள்ளக்கல்பட்டி
- வெள்ளுர்
- வேங்கைமண்டலம்
- ஜெயங்கொண்டான்