மீரா மிதுன்

மீரா மிதுன் (Meera Mitun), ஒரு இந்திய வடிவழகி .

துவக்க வாழ்கை

மீரா மிதுன் சென்னையில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பயின்றார் , பின்னர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் நுண்ணுயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

போட்டிகள் வரலாறு

மிஸ் தென் இந்தியா 2016

மீரா மிதுன் மிஸ் தென் இந்தியா 2016 போட்டியின் வெற்றியாளர் ஆவார். தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 18 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இவர் வென்றார். இந்த போட்டியின் 15 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக வென்ற சென்னைப் பெண் இவராவார். மேலும் இவர் மிஸ் தமிழ்நாடு 2016 பட்டம் பெற்றவராவார். பல்வேறு பிராந்தியங்கள், மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் இவர் போட்டியிட்டுள்ளார். என்றாலும், இவர் மிஸ் தென் இந்தியா பட்டத்தையும், இலட்சினையையும் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் 2019 சூன் மாதத்தில் இவர் பெற்ற மிஸ் இந்தியா சவுத் பட்டமானது போட்டி அமைப்பாளரால் திரும்பப் பெறப்பட்டது. [1] [2]

மிஸ் குயின் ஆப் இந்தியா 2016

மீரா மித்துன் 2016 ஆம் ஆண்டு மிஸ் குயின் ஆப் இந்தியா போட்டியில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார். இந்தியா முழுவதிலும் கலந்துகொண்ட பல்வேறு போட்டியாளர்களிடையே, தெற்கை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து போட்டியாளர்களிடையே பிராந்திய பிரிவின் கீழ் 2016 மிஸ் குயின் ஆப் சவுத் என முடிசூட்டப்பட்டார்.

நடிப்பு வாழ்க்கை

மீரா மிதுன் 2017 ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் திரைப்பட வாழ்வில் நுழைந்தார். இப்படத்தில் இவர் வட சென்னையில் வசிக்கும் பக்கத்துவீட்டுப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டார். இவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்த படமாக இவரது இரண்டாவது படமான சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் அமைந்தது. இப்படத்தில் இவர் கலையரசனின் நண்பனின் மனைவியாக நடித்தார்.

திரைப்பட வரலாறு

குறி
  இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் மொழி பங்கு குறிப்புக்கள்
2017 8 தோட்டாக்கள் தமிழ் மகா
2018 தானா சேர்ந்த கூட்டம் தமிழ் இனியனின் நண்பரின் மனைவி
2019 போதை ஏறி புத்தி மாறி தமிழ் ரோஷனின் காதலி

தொலைக்காட்சி

ஆண்டு நிரல் / காட்சி பங்கு அலைவரிசை மொழி குறிப்புக்கள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி தமிழ் ரியாலிட்டி டிவி தொடர்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=மீரா_மிதுன்&oldid=23194" இருந்து மீள்விக்கப்பட்டது