மிஸ் கமலா
மிஸ் கமலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. ராஜலட்சுமி முக்கிய பாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தின் கதையை அவரே எழுதி இயக்கினார்.
மிஸ் கமலா | |
---|---|
இயக்கம் | டி. பி. ராஜலட்சுமி |
கதை | டி. பி. ராஜலட்சுமி |
நடிப்பு | டி. பி. ராஜலட்சுமி |
வெளியீடு | 1936 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்கிறார். தோடி ராகத்தில் ராகம், தானம், பல்லவியும், நன்னு விடிச்சி என்ற கீர்த்தனையை ரிட்டிகவுலா ராகத்திலும் வாசித்திருக்கிறார்[1].
உப தகவல்
1930 களின் பிரபல நாடக நடிகையும், முதல் பேசும் (காளிதாஸ்) பட நாயகியுமான டி. பி. ராஜலட்சுமி, 5 ஆண்டுகளில் தானே கதை வசனம் எழுதி நடித்து தயாரித்து இயக்கிய படமாகும். மேலும், டி. பி. ராஜலட்சுமி முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பெயரும் இவருக்கு உண்டு.[2]
குறிப்புகள்
- ↑ Memorable notes பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம், ராண்டார் கை, த இந்து, டிசம்பர் 24, 2010.
- ↑ "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). 2007 இம் மூலத்தில் இருந்து 2018-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181207140849/http://www.lakshmansruthi.com/cineprofiles/1936-cinedetails30.asp. பார்த்த நாள்: 2016-10-27.