மா. ஜானகிராமன்
மா. ஜானகிராமன் (பிறப்பு சூன் 23, 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் (புகைப்படத்திற்கு நன்றி வல்லினம்)தேர்ச்சி பெற்ற பொது நிலை ஊழியராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் நாவல், கட்டுரைகள் எழுதிவரும் அதேநேரம், சமுதாயப் பிரச்சினைகள், தோட்டப்புற இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்தும் அதிகம் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும் தொழிற்சங்கங்கள் பற்றியும் தொழிலாள்ர் பிரச்சினைகள் பற்றியும் பல அனைத்துலகக் கருத்தரங்குகளில் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
நூல்கள்
- மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை - 2006
- The Malaysian Indian Dilemma - 2009
- The Malaysian Indian Forgotten History of the colonoal era - 2016
- மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு - 2021
- "அவளுக்கென்று ஒரு மனம்" (நாவல்)
பரிசில்களும், விருதுகளும்
- Millenium Medal of Honor (1999) - அமெரிக்க வாழ்க்கை வரலாற்றுக் கழகம்
- தனிநாயக அடிகளார் விருது (1994) - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003).