மா. சுப்பிரமணியம்
மா. சுப்பிரமணியம் (பிறப்பு: டிசம்பர் 13 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எம். எஸ். மணியம்; கொம்பன் எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்டவர். இவர் இதழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார். "கொம்பன்" என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. "தனிமரம்" எனும் சமுக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.