மார்ச்சு 5
மார்ச்சு 5 (March 5) கிரிகோரியன் ஆண்டின் 64 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 65 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன.
<< | மார்ச் 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXXV |
நிகழ்வுகள்
- 363 – உரோமைப் பேரரசர் யூலியன் அந்தியோக்கியாவில் இருந்து 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான்.
- 1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.
- 1616 – 73 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் பரலோகக் கோளங்களின் சுழற்சி என்ற நூல் தடைசெய்யப்பட்ட ஆவணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் அறிவிக்கப்பட்டது.
- 1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.
- 1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
- 1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.
- 1836 – சாமுவேல் கோல்ட் 34-கேலிபர் சுழல் கைத்துப்பாக்கிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1857 – கொழும்பு கோட்டையில் தற்போதும் இயங்கும் கொழும்பு பழைய கலங்கரை விளக்கம் கட்டி முடிக்கப்பட்டது.[1]
- 1906 – மோரோ கிளர்ச்சி: அமெரிக்க இராணுவம் பழங்குடி மோரோ மகளின் கிளர்ச்சியை அடக்க பெருமளவு படையினரை புட் டாஜோ பகுதியில் குவித்தது. இத்தாக்குதல்களில் ஆறு பழங்குடியினர் மட்டுமே உயிர் தப்பினர்.
- 1912 – இத்தாலிய-துருக்கியப் போர்: இத்தாலியப் படையினரே முதன் முதலாக வான்கப்பல்களை படைத்துறைத் தேவைக்காகப் பயன்படுத்தினர்.
- 1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.
- 1933 – செருமானியத் தேர்தலில் இட்லரின் நாட்சி கட்சி 43.9% வாக்குகளைப் பெற்றது.
- 1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் இடச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் தலைநகரான பத்தேவியாவைக் கைப்பற்றினர்.
- 1946 – பனிப்போர்: வின்ஸ்டன் சர்ச்சில் மிசோரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது "இரும்புத் திரை" என்ற பதத்தைப் பயன்படுத்தினார்.
- 1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.
- 1960 – இந்தோனேசிய அரசுத்தலைவர் சுகர்ணோ 1955 ஆ ஆண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து, தானே தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றத்தை அறிவித்தார்.
- 1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
- 1965 – பகுரைனில் பிரித்தானியக் குடியேற்றவாதிகளுக்கு எதிரான இடதுசாரிக் கிளர்ச்சி இடம்பெற்றது.
- 1970 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 43 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்தது.
- 1974 – யோம் கிப்பூர்ப் போர்: இசுரேலியப் படையினர் சூயசு கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து பின்வாங்கினர்.
- 1979 – சோவியத் விண்கலங்கள் வெனேரா 11, வெனேரா 12, மற்றும் செருமனிய-அமெரிக்க விண்கலம் ஈலியோசு II ஆகியவற்றை காமா கதிர் வெடிப்பு தாக்கியது.
- 1981 – ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.
- 1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.
- 1998 – இலங்கை தலைநகர் கொழும்பில் மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பேருந்துக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் வரை கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.[2][3]
- 2003 – கைஃபா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 இசுரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
- 2012 – மடகாசுகரை இரீனா என்ற வெப்பவலயச் சூறாவளி தாக்கியதில் 75 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1512 – கிரார்துசு மெர்காதோர், பிளமிய கணிதவியலாளர், நிலப்படவியலாளர், மெய்யியலாளர் (இ. 1594)
- 1871 – ரோசா லக்சம்பேர்க், போலந்து-உருசியப் பொருளியலாளர், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)
- 1898 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (இ. 1976)
- 1913 – கங்குபாய், இந்துத்தானி இசைப் பாடகி (இ. 2009)
- 1916 – பிஜு பட்நாயக், இந்திய அரசியல்வாதி (இ. 1997)
- 1931 – கே. ஏ. சுப்பிரமணியம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1989)
- 1934 – டேனியல் கானமென், நோபல் பரிசு பெற்ற இசுரேலிய-அமெரிக்கப் பொருளியலாளர்
- 1938 – லின் மர்குலிஸ், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2011)
- 1956 – ஸ்ரீபிரியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1958 – நாசர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1959 – சிவ்ராஜ் சிங் சௌஃகான், மத்தியப் பிரதேச முதலமைச்சர்
- 1976 – செல்வராகவன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
- 1984 – ஆர்த்தி அகர்வால், இந்திய திரைப்பட நடிகை (இ. 2015)
இறப்புகள்
- 254 – முதலாம் லூசியஸ் (திருத்தந்தை) (பி. 200)
- 1827 – பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1749)
- 1827 – வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1745)
- 1903 – உசான்-அனத்தோல் தெமார்சே, பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)
- 1953 – ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1878)
- 1966 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (பி. 1889)
- 1994 – வ. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1930)
- 2006 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1926)
- 2013 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர், தமிழறிஞர் (பி. 1936)
- 2013 – ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (பி. 1954)
- 2013 – ராஜசுலோசனா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1935)
- 2013 – க. பொ. இளம்வழுதி, புதுவை எழுத்தாளர் (பி. 1936)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ "Principal Ceylon Events, 1998". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.
- ↑ Colombo blast: details emerge, தமிழ்நெட், மார்ச் 5, 1998
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.