மார்கரெட் காக்பர்ன்

மார்கரெட் காக்பர்ன் (Margaret Bushby Lascelles Cockburn, 2 சூலை 1829 – 26 மார்ச் 1928) ஒரு ஓவியரும், தொழில்முறையற்ற பறவையியலாளரும் ஆவார்.

மார்கரெட் காக்பர்ன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மார்கரெட் காக்பர்ன்
பிறப்புபெயர் Margaret Bushby Lascelles Cockburn
பிறந்ததிகதி 2 சூலை 1829
இறப்பு 26 மார்ச் 1928
Margaret Bushby Lascelles Cockburn's grave at கோத்தகிரியில் மார்கரெட் காக்பர்னின்நினைவிடம்

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாட்டில் சேலத்தில் 1829 இல் இவர் பிறந்தார். இவரது தந்தை எம். டி. காக்பர்ன் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். 1855 இல் இருந்து நீலகிரியில் வாழ்ந்து வந்தார். மார்கரெட் ஆல்போர்ட்சு தோட்டத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு பின்னர் உள்ளூர் இயற்கை வரலாற்றை ஆராய்ந்து வந்தார். இவரது பல கட்டுரைகள் ஆலன் ஆக்டவியன் ஹியூமின் ஆக்கங்களில் வெளிவந்துள்ளன.[1] 858 ஆம் ஆண்டு முதல் பறவைகளையும் தாவரங்களையும் படங்களாக வரைய ஆரம்பித்தார். கோத்தகிரியில் இவர் வரைந்த ஓவியங்களை இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் 2002 இல் நாட்குறிப்பாக வெளியிட்டது.[2] இவரது பட்டாம்பூச்சிகளின் தொகுப்பு ஒன்றும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

இவர் வரைந்த படங்கள் தொகுக்கப்பட்டு 'நீலகிரி பேர்ட்ஸ் அண்ட் மிஸ்ஸலேனியஸ்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இவர் பறவைகள் கூடுகட்டும் விதத்தை முறையாக ஆவணப்படுத்தினார். 61 பறவையினங்களின் இனப்பெருக்க முறைகளை ஆவணப்படுத்தினார். இவர் 1928 ஆம் ஆண்டு மார்ச்சு 26 இல் மறைந்தார்.[3]

இவர் படுகர்களுக்கான முதலாவது பள்ளியை ஆரம்பித்தார். கோத்தகிரியில் 1867 இல் தேவாலயம் ஒன்றை அமைப்பதில் பங்காற்றினார்.[4]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மார்கரெட்_காக்பர்ன்&oldid=7014" இருந்து மீள்விக்கப்பட்டது