மாயப்பசுவை வதைத்த படலம்
மாயப்பசுவை வதைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 29 ஆவது படலமாகும் (செய்யுள் பத்திகள்: 1626 - 1663)[1]. இப்படலம் நாகமேய்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
சுருக்கம்
அனந்தகுண பாண்டியன் ஆட்சியில் மதுரையில் சைவம் பரவியிருப்பதைக் கண்ட சமணர்கள் அபிசார ஹோமம் என்பதை நடத்தினர். அந்த யாகத்திலிருந்து வெளிவந்த ஒரு அரக்கன் பாம்பாக உருவெடுத்து மதுரையை அழிக்க சென்றான். அதனை இறைவன் அருளால் பாண்டியன் வெற்றி பெற்றான். அதனையறிந்த சமணர்கள் மீண்டும் அபிசார ஹோமம் செய்து இம்முறை வெளிப்பட்ட அரக்கனை பசுவாக மாறச் சொல்லி அனுப்பினர்.
பசுவினை செல்வமாக கருதியமையால் பாண்டியனால் பசுவை கொல்லுதல் முடியாது. எனவே இறைவன் இம்முறை தன்னுடைய வாகனமான நந்தியம் பெருமானை பசுவை கொன்று வருமாறு பணித்தார். நந்தியம் பெருமான் கூரிய கொம்பால் பசுவை கொன்றது. அனந்தகுண பாண்டியனுக்குப் பிறகு அவரது மகன் குலபூஷண பாண்டியன் பட்டத்துக்கு வந்தான். [2]
பசுவை நந்தி வதைத்த இடம் பசுமலை என்று மதுரையில் வழங்குன்றனர்.
காண்க
ஆதாரங்கள்
- ↑ "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 29. மாயப் பசுவை வதைத்த படலம் (1626 - 1663)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998-2014. http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0474_02.html. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2016.
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2250
வெளி இணைப்புகள்
- மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம் பரணிடப்பட்டது 2016-09-21 at the வந்தவழி இயந்திரம்