மாசாத்துவான்
மாசாத்துவான் கோவலனின் தந்தை. புகார் நகரில் வாழ்ந்த செல்வன். அரசன் மதிக்கும் செல்வம் படைத்தவன். தனக்கு வருவாயாகக் கிடைக்கும் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படும்படிச் செய்பவன். [1] தன் மகன் கோவலனை பாண்டியன் கொலை செய்தான் என்பது கேட்டு வருந்தினான். சம்பந்தி மாநாய்கனும் தானும் தம்மிடம் இருந்த செல்வங்களை யெல்லாம் தானமாகக் கொடுத்துவிட்டு இருவருமாகத் துறவு பூண்டனர். [2]
மேற்கோள் குறிப்பு
- ↑ பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்; (சிலப்பதிகாரம், காதை 1) - ↑ கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
சாவது-தான் வாழ்வு’ என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ, அன்னை? (சிலப்பதிகாரம், காதை 29)