மல்லிகை (இதழ்)

மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த மாத இதழாகும். 1966 ஆகத்து மாதத்தில் இதன் முதல் இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா. மல்லிகை ஒரு முற்போக்கு மாத இதழ். நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 400 க்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்துள்ளன.

மல்லிகை
இதழாசிரியர்டொமினிக் ஜீவா
வகைஇலக்கியம்
இடைவெளிமாதம் ஒரு முறை
முதல் வெளியீடு1966
நிறுவனம்மல்லிகைப் பந்தல்
நாடுஇலங்கை
வலைத்தளம்[]

மல்லிகையின் சாதனைகள்

  • யாழ்ப்பாணத்தில் மூத்திர ஒழுங்கை என்ற இடத்தில் இருந்து கொண்டே மல்லிகைப் பந்தல் பிரசுரத் தளத்தையும் உருவாக்கி் இன்று அறுபதுக்கும் கூடுதலான தரமான நூல்களை வெளியிட்டுள்ளது மல்லிகையின் சிறப்புகளில் தனித்துவமானது.
  • நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம், தமிழகத்துக் கலை இலக்கியகர்த்தாக்களின் உருவப் படங்களை மல்லிகையின் முகப்பில் பிரசுரித்து வெகு சனங்களின் மத்தியில் அவர்களைக் கொண்டு சென்றது.
  • மல்லிகையில் வெளிவந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிங்களச் சிறுகதைகளை ஒன்று சேர்த்து சிங்களச் சிறுகதைகள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டது.

வெளியீடுகள்

  • அந்தக்காலக் கதைகள்.
  • அந்நியம்.
  • அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்.
  • ஒரு டாக்டரின் டயரியில் இருந்து.
  • நிலக்கிளி.
  • மீன்குஞ்சுகள்.

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=மல்லிகை_(இதழ்)&oldid=14955" இருந்து மீள்விக்கப்பட்டது