மறைஞான சம்பந்தர்

தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் சிறியனவும் பெரியனவுமான பல நூல்களை இயற்றிய புலவர்.[1] களந்தை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது காலம் 16ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் கமலாலய புராணம் செய்த ஆண்டு 1546 (கலி 4647)

இவரது ஆசிரியர்

  • இவரது முதலாம் ஆசிரியர் களந்தை ஞானப்பிரகாச பண்டாரம். இந்த ஞானப்பிரகாச பண்டாரத்தின் ஆசிரியர் களந்தை சத்தியநாத பண்டாரம்.
  • மறைஞான சம்பந்தர் காளத்தி சென்று வாழ்ந்தபோது கண்ணப்ப பண்டாரம் என்பவர் இவரது ஆசிரியர்

இவரது போக்கு

இவருக்கு வழங்கிய பெயர்கள்

சிதம்பரத்தில் குகை மடத்தில் வாழ்ந்தபோது இவர் தன் புலன்களை அடக்குவதற்கு உதவியாகத் தன் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தார். இதனால் இவரைக் ‘கண்கட்டி பண்டாரம்’ என மக்கள் அழைத்தனர்.
திரு மறைஞான பம்பந்தர்
தேசிகர்
காளத்தி மறைஞான பம்பந்தர்
சிதம்பரம் மறைஞான பம்பந்தர்
குகைமடம் மறைஞான பம்பந்தர்

என்றெல்லாம் இவர் குறிப்பிடப்படுகிறார்.

மறைஞான சம்பந்தர் நூல்கள்

மறைஞான சம்பந்தர் பலவகையான நூல்களைப் பெரியனவும் சிறியனவுமாக எழுதியிள்ளார்.

சாத்திரப் பெருநூல்கள்

சிறு நூல்கள்

விரதங்கள் பற்றிக் கூறும் நூல்களுக்குக் 'கற்பம்' எனப் பெயரிட்டுள்ளனர். இன்னின்ன விரதங்கள் இருந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் எனவும் இந்த நூல்களில் கூறப்பட்டுள்ளன.

  • மகா சிவராத்திரி கற்பம் - இது 39 குறள் வெண்பாக்களால் ஆனது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி விரதம் பற்றிகை கூறிவது.
  • மாத சிவராத்திரி கற்பம் - இது 14 குறள் வெண்பாக்களால் ஆனது. மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் பற்றிக் கூறுவது.
  • சோமவாரச் சிவராத்திரி கற்பம் - இது 17 குறள் வெண்பாக்களால் ஆனது. மாதந்தோறும் வரும் சோமவார நன்னாளில் செய்யவேண்டிய பூசை முறைகளைக் கூறுவது.
  • சோமவாரக் கற்பம் - இது 216 குறள் வெண்பாக்களால் ஆனது. எட்டெட்டு விளையாட்டு மதுரை ஈசனுக்கு உரியது என்றும், காசி, காளத்தி, ஆரூர் வழிபட்டால் பெறும் பயன்கள் பயன்கள் பற்றியும் கூறுகிறது.
  • திருக்கோயிற் குற்றம் - இது எண்சீர் விருத்தம் இரண்டு மட்டும் கொண்ட நூல். இவற்றைச் கோயில்களில் செய்யக்கூடாது என்று சொல்லி 32 குற்றங்களை இது குறிப்பிடுகிறது.

புராணம்

  • அருணகிரிப் புராணம்

கிடைக்காத நூல்கள்

  • பரமத திமிரபானு
  • இறைவனூறுபயன்

வடமொழி நூல்

  • ஆன்மாத்த பூஜா பத்ததி

இவர் எழுதிய நூல்ளுக்கு இவர் கூறும் கருத்து

இவர் தம் நூல்களை நாத்திகர்களுக்குச் சொல்லவோ, காட்டவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார்.[2]

நூலமைதி

ஒப்புநோக்குக

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு

  1. “இவரது நூல்கள் நாப் பழகிச் சந்த இன்பம் படச் சொல்ல வராது” – வெள்ளியம்பலத் தம்பிரான் கூற்று.
  2. சிவதருமோத்திரப் பாடல்
"https://tamilar.wiki/index.php?title=மறைஞான_சம்பந்தர்&oldid=17251" இருந்து மீள்விக்கப்பட்டது