மனிதனின் மறுபக்கம்
மனிதனின் மறுபக்கம் (Manithanin Marupakkam) கே. ரங்கராஜ் இயக்கத்தில், 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரையப்படமாகும். சிவகுமார், ராதா, ஜெயஸ்ரீ, ஜெய் ஜெகதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், இளையராஜா இசை அமைப்பில், 25 ஜூலை 1986 ஆம் தேதி இப்படம் வெளிவந்தது.[1][2]
மனிதனின் மறுபக்கம் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | டி. ஜி. தியாகராஜன் ஜி. சரவணன் |
கதை | ஏ. எல். நாராயணன் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் ராதா ஜெயஸ்ரீ ஜெய் ஜெகதீஷ் |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
கலையகம் | சத்ய ஜோதி பிலிம்ஸ் |
வெளியீடு | 25 ஜூலை 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவகுமார்
- ராதா
- ஜெயஸ்ரீ
- ஜெய் ஜெகதீஷ்
- ராஜ்ய லட்சுமி
- வி. கே. ராமசாமி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- டெல்லி கணேஷ்
- ஏ. ஆர். எஸ்.
- சேது விநாயகம்.
கதைச்சுருக்கம்
தினக்குரல் எனும் இதழில் நிருபராக சேருகிறாள் சுஜாதா (ஜெயஸ்ரீ). தன் தோழி மருத்துவர். சாரதாவுடன் தங்குகிறாள் சுஜாதா. சுஜாதாவின் சகோதரி கலா கொல்லப்படுகிறாள். ரவி வர்மா தன் மனைவி கலாவை (ராதா) கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை அனுபவிக்கும் ஒரு கைதி ஆவான். அவனை சுஜாதா பேட்டி கண்டு, கட்டுரை வடிவில் தினக்குரல் இதழில் வெளியானது. அந்தக் கட்டுரை பெரிய அளவில் பிரபிலமாகி, அவளுக்கும் அவள் பணிபுரியும் தினக்குரலுக்கும் நற்பெயர் சம்பாதித்துத் தந்தது.
கடந்த காலத்தில், ரவி ஒரு விளம்பர நிறுவனத்தின் முதலாளி. தன்னுடன் பணிபுரியும் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறான். விளம்பரத்தின் பொழுது அரைகுறையாக துணி அணிய மறுத்த கலாவுடன் ரவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கலாவின் கர்ப்பத்தை சந்தேகித்ததால், அவளை விவாகரத்து செய்ய முடிவுசெய்கிறான் ரவி. கலாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் கோபம் கொண்ட ரவி, கலாவை கொன்றுவிடுகிறான். அதனால் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
தண்டனைக்கு ஒரு நாள் முன்பு, சிறையிலிருந்து தப்பித்த ரவி, சுஜாதாவை சந்திக்க நேரிடுகிறது. தான் கலாவை கொல்லவில்லை என்றும், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜுன் தான் கொன்றான் என்றும், கொலை நடந்த இடத்தில் தான் இருந்ததால் குற்றம் சாற்றப்பட்டதாகவும் சுஜாதாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறுகிறான் ரவி வர்மா. அர்ஜுனை பழிவாங்கவே சிறையில் இருந்து தப்பித்தாக கூறும் ரவி, இறுதியில் அர்ஜுனை பழிவாங்கினானா என்பதே மீதிக் கதையாகும்.
ஒலித்தொகுப்பு
இப்படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா ஆவார். வைரமுத்து, புலமைப்பித்தன், நா. காமராசன் ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். 5 பாடல்களை கொண்ட இசைத்தொகுப்பு 1986 ஆம் ஆண்டு வெளியானது.[3][4]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"சந்தோசம் இன்று" | சித்ரா | வைரமுத்து | 04.21 |
"கண்ணனை காண்பாயா" | கே. எஸ். சித்ரா | நா. காமராசன் | 03:58 |
"ஊமை நெஞ்சின் சொந்தம்" | கே. ஜே. யேசுதாஸ் | வைரமுத்து | 02:50 |
"கல்லுக்குள்ளே வந்த ஈரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 04.24 |
வெளி-இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "http://spicyonion.com/movie/manithanin-marupakkam/". http://spicyonion.com/movie/manithanin-marupakkam/.
- ↑ "http://www.gomolo.com/manidanin-marupakkam-movie/11053" இம் மூலத்தில் இருந்து 2019-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190320181343/http://www.gomolo.com/manidanin-marupakkam-movie/11053.
- ↑ "https://avdigital.in/collections/ilaiyaraaja-vinyl-records/products/manithanin-marupakkam". https://avdigital.in/collections/ilaiyaraaja-vinyl-records/products/manithanin-marupakkam.
- ↑ "http://play.raaga.com/tamil/album/manithanin-maruppakkam-T0002798". http://play.raaga.com/tamil/album/manithanin-maruppakkam-T0002798.