மந்தாரவதி

மந்தாரவதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்கோனி, டி. எஸ். பாபு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.[1] இப்படத்தை இத்தாலியரான டி. மார்கோனி போர்க்கைதியாகி சிறைக்கு சென்றுவிட்டதால், எஞ்சிய படத்தை ஸ்ரீபாபுலால் இயக்கினார்.[2] டி. ஆர். ராஜகுமாரி, பி. ஜி. வெங்கடேசன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[3]

மந்தாரவதி
இயக்கம்டி. மார்க்கோனி
டி. எஸ். பாபு
தயாரிப்புஆர். வி. பிக்சர்ஸ்
கதைவசனம்: சி. ஏ. இலட்சுமணதாஸ்
இசைஜி. ஜே. காப்ரியல்
நடிப்புடி. ஆர். ராஜகுமாரி
பி. ஜி. வெங்கடேசன்
காளி என். ரத்தினம்
எஸ். டி. சுப்பையா,
எஸ். எஸ். கொக்கோ
ஒளிப்பதிவுபி. எல். ராய்,
ஜி. என். மங்காட்
படத்தொகுப்புஎன். கே. கோபால்
வெளியீடுஆகத்து 9, 1941
ஓட்டம்.
நீளம்13008 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

மொத்தம் 16 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. டி. வி. நடராஜ ஆசாரி எழுதிய பாடல்களுக்கு ஜி. ஜே. காப்ரியேல் இசையமைத்திருந்தார். பி. ஜி. வெங்கடேசன், காளி என். ரத்தினம், எஸ். டி. சுப்பையா, டி. ஆர். ராஜகுமாரி, எஸ். எஸ். கொக்கோ ஆகியோர் பாடியிருந்தனர்.

  • கான மனோகரி கலைவாணி.. (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
  • பகலவன் எழுந்தான் (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
  • தியாகமூர்த்தி நீயே (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)
  • தேவா தேவா (பாடியவர்: பி. ஜி. வெங்கடேசன்)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மந்தாரவதி&oldid=36234" இருந்து மீள்விக்கப்பட்டது