மதுக்கூர் இராமலிங்கம்

மதுக்கூர் இராமலிங்கம் (Madukkur Ramalingam) என்பவர் ஓர் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[1]

மதுக்கூர் இராமலிங்கம்
மதுக்கூர் இராமலிங்கம்
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
முன்னவர் சு. வெங்கடேசன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மதுக்கூர் இராமலிங்கம்
பிறந்தஇடம் விக்ரமம், மதுக்கூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணி எழுத்தாளர், அரசியலர்
குடியுரிமை இந்தியர்
கல்வி நிலையம் ஏ. வி. சி. கல்லூரி
அரசியல்கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பெற்றோர்
  • மு. சந்திரன்
  • க. பாக்கியம்
துணைவர் மீனாம்பிகை
பிள்ளைகள்
  • பாரதி வசந்த்
  • தமிழ் அமுதன்

வாழ்க்கைச் சுருக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள விக்ரமம் என்ற கிராமத்தில் மு. சந்திரன் மற்றும் க. பாக்கியம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மயிலாடுதுறை ஏ. வி. சி. கல்லூரியில் பொருளாதாரம் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். 1983 இல் இளங்கலை படிக்கும் பொழுது "புள்ளியில்லா கோலங்கள்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.இவர் மீனாம்பிகை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாரதி வசந்த், தமிழ் அமுதன் என இரு மகன்கள் உள்ளனர். இவர் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.[2]

படைப்புகள்

  1. புள்ளியில்லா கோலங்கள் (1983)
  2. காய்க்கத் தெரியாத காகிதப்பூக்கள் (1985)
  3. திண்ணை பேச்சு (2002)
  4. இடது பக்கம் செல்லவும் (2004)
  5. விந்தை மனிதர்கள் (2005)
  6. கையளவு கடல் (2018)
  7. தமிழகத்தில் சமூக சீர்திருத்த இயக்கம் (2019)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மதுக்கூர்_இராமலிங்கம்&oldid=5430" இருந்து மீள்விக்கப்பட்டது