மதன மோகினி

மதன மோகினி (mathana mohini) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். பதியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, சி. ஆர். ராஜகுமாரி, புளிமூட்டை ராமசாமி ,பொள்ளாச்சி கமலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மதன மோகினி
இயக்கம்எம். எல். பதி
தயாரிப்புலிபர்ட்டி பிக்சர்ஸ்
கதைகதை கயர் கண்ணழகன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புபி. வி. நரசிம்ம பாரதி, சி. ஆர். ராஜகுமாரி, புளிமூட்டை ராமசாமி, பி. எஸ். வீரப்பா, எம். எல். பதி, பொள்ளாச்சி கமலா, கே. எஸ். அங்கமுத்து, எம். வி. நவநீதம், வி. எம். ஏழுமலை, லூஸ் ஆறுமுகம்
வெளியீடுமார்ச்சு 14, 1953
நீளம்15845 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை எம். பி. சிவம் இயற்றினார். பின்னணி பாடகர்கள் ஏ. பி. கோமளா, என். எல். கானசரஸ்வதி, கே. வி. மகாதேவன், ஜிக்கி, ஜி. கஸ்தூரி, பி. லீலா, கே. ஆர். லட்சுமி, ஏ. எம். அப்பாதுரை ஆகியோர்.[2]

கதைச்சுருக்கம்

கடவுளை நம்பாத ஒரு ராஜாவிற்கு, ஒரு மகனும் மதனா , மோகினி என்ற இரண்டு மருமகளும் உள்ளனர். மருமகள்கள் மிகவும் பக்தியுள்ளவர்கள். அவர்களில் ஒருத்தி, மதனா மிகுந்த பக்தியுடன் பிரார்த்தனையிலும் ஈடுபடுகிறாள். ஆனால் ராஜா அதை விரும்பவில்லை. மதனா தன்னை ஒரு ஆண் போல வேடமிட்டு சுற்றித் திரிபவள். எனவே ஒரு சமயம் அரண்மனையிலிருந்து வெளியேறி, ஒரு கொள்ளைக்கார கும்பலோடு இணைகிறாள். அவர்கள் ராபின் ஹூட் போன்று செல்வந்தர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கி உதவுகிறார்கள். இளவரசர், மாறுவேடத்தில், மதனாவை சந்தித்து, அரண்மனையின் உள்ள 3 விலைமதிப்பற்ற கற்கள் வைத்திருக்கும் ஒரு அறையின் ரகசிய வழியை அவர் அறிந்துள்ளதாக கூறுகிறார். அவர்கள் ஒன்றிணைந்து ஒரே ஒரு விலைமதிப்பற்ற கல்லை மட்டும் எடுக்கிறார்கள். ஆனால் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். உண்மையில் அவர்கள் யார் என்பதை அறிய அங்கே அரசன் வருகிறான். மோகினியை இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் தனது மகன், மதனாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிந்து கொள்கிறார். பல திருப்பங்களுக்கு இறுதியாக இளவரசன் மற்றும் மதனா இருவரும் இணைகிறார்கள்.

நடிப்பு

தி இந்து நாளிதழில் வெளிவந்த தகவலை அடிப்படையாகக் கொண்டது.

பி. வி. நரசிம்மபாரதி
சி. ஆர். ராஜகுமாரி
பி. எஸ். வீரப்பா
பொள்ளாச்சி கமலா
எம். எல். பதி
எம். வி. நவநீதம்
புளி மூட்டை ராமசாமி
கே. எஸ். அங்கமுத்து
வி. எம். ஏழுமலை
லூஸ் ஆறுமுகம்

படக் குழுவினர்.

இப்பட்டியல் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் தகவல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.

  • இயக்கம்: எம். எல். பதி
  • கதை: கயற்கண்ணழகன்
  • வசனம்: எம். வி . சிவம், கே. வி பார்த்தசாரதி
  • ஒளிப்பதிவு: பிரபாகர்
  • படத்தொகுப்பு: சி. ராஜம்
  • சண்டை: வி. எம். புருசோத்தம நாயுடு, விட்டல்.
  • படபிடிப்பு: சிட்டாடல்

தயாரிப்பு

சென்னையைச் சேர்ந்த வங்க மொழித் திரைப்பட பிரபலம் ஜ்யோதி சின்கா என்பவரின் ஆலோசனையின் பேரில் படமாக்கப்பட்டது.

பாடல்கள்

எண் பாடல் பாடகர்/கள் கால அளவு
1 ஆதி முதலானவர் குழுவினருடன் ஏ. பி. கோமளா, என். எல். கானசரஸ்வதி 04:10
2 உண்மைக்கே உலகில் உயர்வுதான் இல்லையே கே. வி. மகாதேவன் 03:08
3 பொம்பளதானெண்ணு எண்ண வேண்டாம் குழுவினருடன் ஏ. பி. கோமளா 04:16
4 நிலையாத துன்பம் நேர்ந்ததினாலே ஜிக்கி
5 பேரு சொல்லும் பிள்ளை இல்லையே கே. வி. மகாதேவன் & ஜி. கஸ்தூரி
6 வானவீதியிலே விளையாடும் வெண்ணிலவே பி. லீலா 03:15
7 வாழிய செந்தமிழ் தாயே கே. வி. மகாதேவன் 02:48
8 இனிமையான நேரம் பி. லீலா
9 கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி கே. வி. மகாதேவன் & பி. லீலா 03:14
10 அகர முதல எழுத்தெல்லாம் .. உளியிட்ட கல்லையும் கே. ஆர். லட்சுமி
11 இளம் கன்று போலவே உள்ளம் துள்ளுதே ஜிக்கி
12 கோ கோ கோ கொக்கரக்கோ ஏ. எம். அப்பாதுரை

உசாத்துணை

  1. Randor Guy (11 March 2010). "Madana Mohini (1953)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170315044847/http://www.thehindu.com/features/cinema/Madana-Mohini-1953/article16560523.ece. பார்த்த நாள்: 15 March 2017. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 57. 
"https://tamilar.wiki/index.php?title=மதன_மோகினி&oldid=36207" இருந்து மீள்விக்கப்பட்டது