மணியம் செல்வன்
மணியம் செல்வன் (பிறப்பு:அக்டோபர், 1950) புகழ் பெற்ற ஒரு தமிழ் ஓவியர் புகைப்படத்திற்கு நன்றி ramanans.wordpress.com. நாற்பதாண்டுகளாக பல முன்னணி இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளியாகியுள்ளன. இவர் புகழ் பெற்ற ஓவியர் மணியத்தின் மகனாவார்.[1] சென்னை ஓவியம் மற்றும் கைவினைக் கலைக் கல்லூரியில் படித்த மணியம் செல்வன், கதைகள், முப்பரிணாம அசைப்படங்களுக்கு ஓவியம் வரைந்துள்ளார். இவரது ஓவியங்களில் “ம. செ” என்று கையெழுத்திடுவது வழக்கம். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு பரப்புரைத் திட்டங்களுக்கு ஓவியராகவும், உடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஓவியப் பணிக்காக இந்திய நடுவண் அரசின் என். சி. ஈ. ஆர். டி விருது பெற்றுள்ளார். இவரது மகள்கள் சுபாஷினி மற்றும் தாரிணி இருவரும் ஓவியர்கள் ஆவர்.
இவரது முதல் ஓவியம் 1976ஆம் ஆண்டில் கல்கியின் வெளியிடப்படாத புதினம் அரும்பு அம்புகள் அவரது மகன் கல்கி இராசேந்திரனால் பதிப்பிக்கப்பட்டபோது அதற்கு ஓவியங்கள் வரைந்து பரவலாக அறியப்பட்டார். மேலும் கல்கி வார இதழில் சிவகாமியின் சபதம் மீண்டும் பதிப்பானபோது அதற்கு வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்காக சுஜாதாவின் பூக்குட்டி மற்றும் மடிசார் மாமி ஆகிய தொடர்கதைகளுக்கு இவர் வரைந்த ஓவியங்களும் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.
ஓவியத்துறை
பெரும்பாலும் இவர் பயன்படுத்துவது நீர்வண்ணங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ "மலைக்க வைக்கும் கலைஞர்- ஓவியர் மணியம் செல்வன்". Hindu Tamil Thisai. 2014-07-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.