மணியம் (ஓவியர்)
மணியம் என்ற புனைபெயரில் புகழ்பெற்ற டி. யூ. சுப்பிரமணியம் (சனவரி 26, 1924 – 1968)[1] ஓர் சிறந்த கதை விளக்கும் ஓவியராக விளங்கினார். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய வரலாற்றுப் புதினங்களுக்கு அதன் கதாபாத்திரங்கள் வாசகர்களின் மனதில் நிலைக்குமாறு இதழோவியம் வரைந்து புகழ்பெற்றார்.
மணியம் (ஓவியர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மணியம் |
---|---|
பிறந்ததிகதி | 26 சனவரி 1924 |
இறப்பு | 1968 (அகவை 44) |
அறியப்படுவது | ஓவியர் |
பிள்ளைகள் | மணியம் செல்வன் |
’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களையும், புத்தகத்தை படித்துவிட்டு திருப்பித் தர வாடகைக்குக் கொடுப்பவர்களுக்கும் நகைச்சுவையாக அறிவுறுத்தும் பெருமை பெற்றவை இவரது ஓவியங்கள்.[2]
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஓவியர் மணியம் - (ஆங்கில மொழியில்)