மங்கள நாயகி

மங்கள நாயகி 1980 என்பது ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 21 மார்ச் 1980 அன்று வெளியானது.[1] இது சாஜன் பினா சுஹாகன் என்ற இந்தி படத்தின் மறுஆக்கம் ஆகும்.[2] இந்தப் படத்தின் வழியாகக் குழந்தை நட்சத்திரமாக சோபனா திரையில் அறிமுகமானார்.[3]

மங்கள நாயகி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசங்கர்லால்
ஜே. சி. அண்ட் சௌத்ரி ஆர்ட்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஸ்ரீகாந்த்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 21, 1980
நீளம்3971 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

கதாநாயகிக்கும் மருத்துவ மாணவனுக்கும் காதல் ஏற்படுகிறது. படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். நாயகன் மருத்துவ மேற்படிப்புக்காக வெளிநாடு செல்கிறான். இதற்கிடையில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் கருவாயில் இருக்கும் நாயகியின் தந்தை தன் நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வாக்கு வாங்கிவிட்டு இறந்து போகிறார். வேறுவழியின்றி நாயகி அவரை திருமணம் செய்து கொள்கிறாள். இதற்கிடையில் நாயகியின் காதல் விவகாரத்தை அறிந்த ஒருவன் நாயகியை மிரட்டுகிறான். ஒரு கட்டதில் அவன் கொல்லப்படுகிறான். பிறகு என்ன நடந்தது என்பேதே கதையாகும்.

நடிப்பு

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார் ஆவார்.[4][5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஓ யம்மா"  எஸ். பி. சைலஜா, பி. சுசீலா  
2. "ராஜாத்தி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்  
3. "மாப்பிள்ளை மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்பில"  டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. சைலஜா  
4. "வடிவேலனே சிவபாலனே"  பி. சுசீலா  
5. "கண்களால் நான் வரைந்த"  கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா  

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்




"https://tamilar.wiki/index.php?title=மங்கள_நாயகி&oldid=36131" இருந்து மீள்விக்கப்பட்டது