மகிழினி மணிமாறன்
மகிழினி மணிமாறன் ஓர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் கும்கி திரைப்படத்தின் கையளவு நெஞ்சத்திலே என்ற பாடலைப் பாடியுள்ளார், இது இவரின் முதல் திரைப்பட பாடலாகும். இவருக்கு சிறந்த பாடகிக்கான விகடன் விருதுகள் 2012 வழங்கப்பட்டுள்ளது.
வேடந்தாங்கலுக்கு அருகில் உள்ள மாலைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். மணிமாறனின் இசைக்குழுவான புத்தர் கலைக்குழுவில் நாட்டுப்புற பாடல்களை பாடுபவராக உள்ளார். அவரையே இவர் திருமணம் புரிந்துள்ளார்[1] மணிமாறனே தன்னுடைய குரு மற்றும் தன் ஊக்கத்துக்கு காரணமானவர் என்று கூறியுள்ளார். இவர் எடிசன் விருது, விகடன் விருது, தஞ்சாவூர் தமிழ் இசை மன்றத்தின் இசைக்கலை அரசி பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.