போக்கிரி தம்பி

போக்கிரி தம்பி (Pokkiri Thambi) என்பது 1992 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரில்லர் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கிய இப்படத்தில் ஆன்ந்த் ராஜ், காவேரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, விஜயகுமார், சனகராஜ், ஜெயந்த்குமார், பாலாம்பிகா, குமரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், அனுஜா, குள்ளமணி, பூபதி ராஜா, கிங் காங் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவா இசை அமைத்தார். படமானது 22 மே 1992 இல் வெளியானது.[1][2][3][4]

போக்கிரி தம்பி
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புவிஜய முரளி
எஸ். செல்வி
பி. பாண்டியன்
கதைஎஸ். கஜேந்திரகுமார்(உரையாடல்)
திரைக்கதைசெந்தில்நாதன்
இசைதேவா
நடிப்புஆனந்த் ராஜ் (நடிகர்)
காவேரி
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புஜே. இளங்கோ
கலையகம்கவி பாரதி கிரியேசன்ஸ்
வெளியீடுமே 22, 1992 (1992-05-22)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

ஒரு தொலைதூர கிராமத்தில், இரவு நேரங்களில் இளம் பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். மறுநாள் அவர்களின் சடலங்கள் கிடைக்கின்றன. கிராமத் தலைவரான பண்ணையார் ( விஜயகுமார் ) குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டிப்பதாக கிராம மக்களுக்கு உறுதியளிக்கிறார். தம்பிதுரை ( ஆனந்தராஜ் ) ஒரு கோபக்கார இளைஞன். பண்ணையாரின் பண்ணையில் பகல் நேரங்களில் கடினமாக உழைத்து, இரவில் சாராயம் குடித்து மகிழ்கிறான். அவன் தன் தாய் (வி. ஆர். திலகம்), சகோதரி செல்வி (பாலாம்பிகா) ஆகியோருடன் வசித்து வருகிறான். செல்வியும் பண்ணையாரின் மகன் ஜெயந்த்குமாரும் (ஜெயந்த்குமார்) ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள், ஆனால் பண்ணையார் அவர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பிதுரையை அவமானப்படுத்துகிறார். இதனால் கோபம் கொள்ளும் தம்பிதுரை பழிவாங்கும் எண்ணத்துடன் இரவு பண்ணையாரின் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, பண்ணையாரின் மகள் என்று நினைத்து காவேரியை ( காவேரி ) பலவந்தபடுத்தி கற்பழிக்கிறான்.

கிராம பஞ்சாயத்தில், காவேரி தனது அக்காள் இந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு இறந்து கிடந்ததைக் குறிப்பிடுகிறாள். எனவே அவள் குற்றவாளியைக் கண்டுபிடிக்க கிராமத்திற்கு வந்துள்ளாள். அன்று இரவு காவேரி கடத்தப்படுகிறாள். கடத்தியவர் அவளை பண்ணையார் வீட்டில் அடைத்து வைக்கின்றனர். இந்த நிலையில் பண்ணையார் வீட்டுக்கு வந்த தம்பிதுரை அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறான். இதனையடுத்து தம்பிதுரை உடனடியாக அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பண்ணையார் கட்டளையிடுகிறார். அவன் அவளை கிராமவாசிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறான். பின்னர், கிராமத்தில் நடக்கும் தொடர் கொலை, தொடர் கற்பழிப்பழிப்புக்கு பண்ணையாரே காரணம் என்பதை தம்பிதுரை கண்டுபிடித்து, பண்ணையாரின் உண்மையான முகத்தை கிராம மக்களுக்கு காட்டுகிறான். தகு குட்டு வெளிபட்டுவிட்டதால் பண்ணையார் நீர்நிலையில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்.

நடிகர்கள்

இசை

திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 1992 இல் வெளியிடப்பட்ட படத்தின் பாடல் பதிவில் 5 பாடல்கள் உள்ளன.[5][6]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் காளிதாசன். 

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சிலு சிலு"  மனோ, சித்ரா 4:41
2. "மாரி கருமாரி"  மலேசியா வாசுதேவன், சித்ரா 5:26
3. "ஏய் மண்ணுல உருண்டு"  சுவர்ணலதா 4:40
4. "ஓட்ட குடிசைக்குள்ள"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:34
5. "மாட்டு வண்டி"  மலேசியா வாசுதேவன் 4:18
மொத்த நீளம்:
23:39

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=போக்கிரி_தம்பி&oldid=36043" இருந்து மீள்விக்கப்பட்டது