பொன்முகம்
பொன்முகம் (பி: 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். பொற்கொடி எனும் புனைப்பெயராலும் அறியப்பட்ட இவர் ஒரு வழக்கறிஞராவார். "தமிழ் நேசன்" துணை ஆசிரியராகவும், "உதயம்" இதழில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் தீவிரச் சமுதாயச் சிந்தனையாளர். அரசியல், சட்டம், தமிழ்க்கல்வி குறித்து நிறைய எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதிவருகின்றார்.
பொன்முகம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பொன்முகம் |
---|---|
பிறந்ததிகதி | 1939 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எழுத்துத் துறை ஈடுபாடு
1963 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "களம் இங்கே, கண்ணியம் எங்கே?" (கட்டுரை)
- "மலேசிய அரசியலில் தமிழ்ச் சமுதாயம்: எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்" (கட்டுரை, 2007)