பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இருபத்தியாறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள ஆவணம் என்ற இடத்தில் இருப்பு அலுவலமாக இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,164 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 11,796 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 179 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தியாறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அம்மையாண்டி
- அலிவலம்
- இடையாத்தி
- ஒட்டன்காடு
- கலகம்
- கலாத்தூர்
- கல்லூரணிக்காடு
- குறிச்சி
- சிறுவாவிடுதி தெற்கு
- சிறுவாவிடுதி வடக்கு
- செங்காமங்கலம்
- சொர்ணக்காடு
- திருச்சிற்றலம்பலம்
- துரவிக்காடு
- தென்னான்குடி
- பலதாளி
- பழையநகரம்
- பின்னவாசல்
- புன்னவாசல்
- பூவலூர்
- பெயின்கால்
- பெரியநாயகிபுரம்
- மடத்திக்காடு
- மாவடுகுறிச்சி
- வட்டாத்திக்கோட்டை
- வலபிரமன்காடு