பூவுக்குள் பூகம்பம்

பூவுக்குள் பூகம்பம் (Poovukkul Boogambam) என்பது 1988 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். தியாகராஜன் எழுதி இயக்கி தயாரித்த இப்படத்தின் வழியாக அவர் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தியாகராஜன், பார்வதி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும், சரோஜாதேவி, சரண்ராஜ் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்தர். படத்திற்கு சங்கீராஜன் இசையமைத்தார். இந்த படம் 13 ஏப்ரல் 1988 அன்று வெளியானது.

பூவுக்குள் பூகம்பம்
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புதியாகராஜன்
கதைதியாகராஜன்
இசைசங்கீதராஜன்
நடிப்புதியாகராஜன்
பார்வதி
கலையகம்இலட்சுமி சாந்தி மூவிஸ்[1]
வெளியீடு13 ஏப்ரல் 1988[2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

தியாகராஜன் தயாரிது, இயக்குனராக அறிமுகமான இப்படத்தில். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.[3]

இசை

இப்படத்திற்கு சங்கீதராஜனால் இசை அமைக்கப்பட்டது.[4]

வெளியீடு

பூவுக்குள் பூகம்பம் 13 ஏப்ரல் 1988 அன்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 15, 1988 தேதியிட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி, படத்தின் சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் தியாகராஜனே பொறுப்பு என எழுதினார். மேலும் திரைக்கதை குறித்து "மிகவும் தெளிவாக இல்லை" என்றும் குறிப்பிட்டார். படத்தின் இசை மற்றும் படப்பிடிப்பை விமர்சகர் பாராட்டினார்.[3]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூவுக்குள்_பூகம்பம்&oldid=35827" இருந்து மீள்விக்கப்பட்டது