கொம்மை (புதினம்)

பூமணி
பூமணி
பிறந்ததிகதி 12.05.1947 ஆம் ஆண்டு.
பிறந்தஇடம் ஆண்டிபட்டி
கோவில்பட்டி
தமிழ் நாடு
பணி நாவலாசிரியர்
சிறுகதை
எழுத்தாளர்
தேசியம் இந்தியன்
வகை யதார்த்தவாதம்
கருப்பொருள் இலக்கியம்

பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) புகைப்படத்திற்கு நன்றி oneindia சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

வாழ்க்கைக் குறிப்புகள்

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[1]

இலக்கியப் பணி

கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.

ஆக்கங்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • வயிறுகள்.
  • ரீதி.
  • நொறுங்கல்கள்.
  • நல்லநாள்.

புதினங்கள்

திரைப்படம்

சிறப்புகள்

  • தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
  • வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விருதுகள்

விளக்கு விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூமணி&oldid=5130" இருந்து மீள்விக்கப்பட்டது