பூநகரி[1] இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகும். இதனுடைய உள்ளூராட்சிமன்றமாக பூநகரி பிரதேச சபை விளங்குகின்றது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும். பூநகரியில் விளையும் மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலகின் தலைசிறந்த அரிசி வகைகளுள் ஒன்றாகும். பச்சைப்பெருமாள் அரிசி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்லது. பூநகரி அரிசியை மக்கள் அதிகம் விரும்புவதால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரையில் நல்ல கேள்வி நிலவுகின்றது

பூநகரி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பூநகரி
பூநகரி is located in இலங்கை
பூநகரி
பூநகரி
ஆள்கூறுகள்: 9°30′14.47″N 80°12′38.34″E / 9.5040194°N 80.2106500°E / 9.5040194; 80.2106500


பூநகரில் அமைந்திருந்த கூட்டுப் படைத்தளத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் 1993 இல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பலத்த சேதங்களுக்குள்ளானதோடு நாகதேவன் துறையிலுள்ள அதிவேகப் படகுகள் புலிகளின் வசமாகியது. பின்னர் 2000 ஆண்டளவில் எதுவித தாக்குதலும் இன்றி ஆனையிறவு இராணுவ முகாமைப் பலப்படுத்தும் நோக்குடன் பின்வாங்கிச் சென்றனர். இப்பொழுது பலாலித் தளத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்கள் பூநகரியிலிருந்தே மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுவதால் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது.

ஆலயங்கள்

அவற்றுள் சில:[2]

  • பத்தினிப்பாய்ப் பிள்ளையார் ஆலயம்[3]
  • கல்வெட்டுத்திடல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் (கறுக்காய்த்தீவு)[4][5][6][7]
  • சித்தன்குறிச்சி முருகமூர்த்தி கோயில்
  • வெட்டுக்காடு பெரும்படை அம்மன் கோயில்
  • காவாக்குளம் வைரவர் கோயில்
  • நெற்புலவு வராகி அம்மன் கோவில்
  • ஊரிமோட்டை சித்தி விநாயகர் ஆலயம் (தம்பிராய்)
  • ஆலங்கேணி கட்டுக்கரை வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம்
  • பல்லவராயன்கட்டு மாதிரிக்கிராமம் ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=பூநகரி&oldid=39007" இருந்து மீள்விக்கப்பட்டது