பூஜா பத்ரா

பூஜா பத்ரா ஷா ( Pooja Batra Shah; பிறப்பு 27 அக்டோபர் 1975) ஓர் இந்திய-அமெரிக்க [3] நடிகையும், வடிவழகியும் மற்றும் பல அழகிப் போட்டிகளின் வெற்றியாளரும் ஆவார். இவர் முதன்மையாக இந்திப் படங்களில் பணியாற்றுகிறார். இவர் 1993 இல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1983இல் சர்வதேச பெமினா மிஸ் இந்தியா போட்டியில் முடிசூட்டப்பட்டார். மிஸ் இன்டர்நேஷனல் 1993 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4]

Pooja Batra
Pooja Batra.jpg
பிறப்பு27 அக்டோபர் 1975 (1975-10-27) (அகவை 48)
பைசாபாத், உத்தரப் பிரதேசம், India[1][2]
பணி
  • Actress
  • model
வாழ்க்கைத்
துணை
  • Sonu S. Ahluwalia
    (தி. 2003; ம.மு. 2011)
  • Nawab Shah (தி. 2019)
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்Femina Miss India International 1993
முக்கிய
போட்டி(கள்)
Femina Miss India
(Miss India 3)
(Miss India International)
Miss International 1993
(Semi-finalist)

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

பூஜா பத்ரா 27 அக்டோபர் 1975 அன்று இந்தியத் தரைப்படையில் கர்னலாக இருந்த ரவி பத்ரா,[5] மற்றும் மிஸ் இந்தியா (1971) பங்கேற்பாளர் நீலம் பத்ரா ஆகியோருக்குப் பிறந்தார்.[6] பூஜாவிற்கு இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர்.[7] அவர் இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ கௌரவமான பரம வீர சக்கரம் வழங்கப்பட்ட இரண்டாவது லெப்டினன்ட் அருண் கேதார்பால் என்பவருக்கு உறவினராவார்.[8]

பூகா பத்ரா இளமையாக இருந்தபோது தனது குடும்பத்துடன் லூதியானாவில் வசித்து வந்தார்.[9] பள்ளியில் படிக்கும் போது, இவர் ஒரு தடகள வீரராக இருந்தார். 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் போட்டியிட்டார்.[10] இவர் புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் [7] பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.[10][11] மேலும் புனேவில் உள்ள சிம்பயோசிசு மேலாண்மைக் கல்லூரியில் [7] சந்தைப்படுத்தலில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்.[11] இவர் 1993 இல் மிஸ் இன்டர்நேஷனல் அழகுப் போட்டியில் பங்கேற்றார் [12]

கல்லூரியில் பட்டம் பெற்றவுடன் விராசத் ஃபிலிம் ஸ்டுடியோ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இவர இதங்களது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது. 1997 இல் விராசத் என்ற படத்திலும் அதைத் தொடர்ந்து பாய் என்றத் திரைப்படத்திலும் நடித்தார். [13] இவர் ஹசீனா மான் ஜாயேகி, தில் நே ஃபிர் யாத் கியா மற்றும் கஹின் பியார் நா ஹோ ஜாயே உட்பட 20 க்கும் மேற்பட்ட படங்களிலும் பணியாற்றினார். இவரது படங்களில் ஒன்றான தாஜ்மஹால்: என் எட்டர்னல் லவ் ஸ்டோரி,[14] 2004 இல் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் நொய்டாவில் உள்ள ஆசியக் கலை & டெதொலைக்காட்சி அகாதமியின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார்.

பூஜா பத்ரா , 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் உட்பட தென்னிந்திய திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். இதில் மூன்று மலையாள படங்கள் [15] மற்றும் இரண்டு தமிழ் படங்கள் அடங்கும்.

2021 இல், இவர் ;ஸ்குவாட் என்ற படத்தில் நந்தினி ராஜ்புத் என்ற பாத்திரத்தில் தோன்றினார்.[16]

பாத்ரா எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான சோனு எஸ். அலுவாலியா என்பவரை 9 பிப்ரவரி 2003 அன்று புது தில்லியில் திருமணம் செய்து கொண்டு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார்.[1][17] தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமக ஜனவரி 2011 இல், விவாகரத்து கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.[18][19]

தொண்டுப் பணிகள்

எயிட்சு ,[20] வீடற்ற குழந்தைகள், காஷ்மீர் போரில் காயமடைந்த வீரர்கள் உள்ளிட்டோருக்கு உதவும் பல தொண்டு நிறுவனங்களுக்கு பத்ரா உதவியுள்ளார்.

இவர் மை லிட்டில் டெவில் ( பாஸ் யாரி ரகோ ) திரைப்படத்தில், இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக, இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் நடித்தார். இத்திரைப்படத்தை கோபி தேசாய் இயக்கியிருந்தார். 2000இல் மொண்ட்ரியாலில் நடைபெற்ற 24வது உலக திரைப்பட விழா , சிகாகோ சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, 2000; உலக சினிமாவின் 10வது ஆண்டு பிலடெல்பியா திரைப்பட விழா, 2001; மற்றும் மலேசியாவில் இந்திய திரைப்பட விழா, 2005.போன்றவற்றில் திரையிடப்பட்டது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "A Healthy Mantra – Pooja Batra". 10 January 2009 இம் மூலத்தில் இருந்து 18 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090318003834/http://www.rmrmedia.com/blog/2009/01/a-healthy-mantra-pooja-batra/. 
  2. "Where is Miss India winner, 'Virasat' actor Pooja Batra now? Find out" (in en). DNA India. 28 October 2021. https://www.dnaindia.com/bollywood/report-where-is-miss-india-winner-virasat-actor-pooja-batra-now-find-out-nawab-shah-2917432. 
  3. "#electionday #ivoted #MidtermElections2018". 7 November 2018. https://twitter.com/.  Missing or empty |user= (help); Missing or empty |number= (help)
  4. Basu, Nilanjana (4 February 2021). "Pooja Batra's Miss India Memories - A Throwback To What Made 1993 Special". NDTV. https://www.ndtv.com/entertainment/pooja-batras-miss-india-memories-a-throwback-to-what-made-1993-special-2362789. 
  5. Tiwari, Nimisha (13 August 2009). "What's Pooja Batra doing in Mumbai!". http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Whats-Pooja-Batra-doing-in-Mumbai/articleshow/4885067.cms. 
  6. "'I'm not his ex, Akshay Kumar is my ex'". 25 June 1997. http://www.rediff.com/movies/jun/25pooja1.htm. 
  7. 7.0 7.1 7.2 ""To those interested in entering the entertainment world: believe in yourself, have the chops, and be ready to work hard."—Pooja Batra". Roshni Media Group. http://roshnimedia.com/blog/wp-content/uploads/2016/03/Ambassadors_9.pdf. ""To those interested in entering the entertainment world: believe in yourself, have the chops, and be ready to work hard."—Pooja Batra" (PDF). Roshni Media Group. Retrieved 1 May 2016.
  8. "I never really toot the horn about my family or my lineage but this I gotta.. So proud to be related to #shaheed #secondlieutenant #arunkhetarpal #pvc #posthumous #aka The bravest officer of the Indian Army. #mydadscousin #battlefieldofbasantar #indopakwar71 As someone once said 'Wars are created by politicians, compounded by bureaucrats and fought by soldiers.'" இம் மூலத்தில் இருந்து 24 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/iarchive/s/instagram/B5CFZZhhASF. 
  9. Vashisht-Kumar, Divya (7 March 2016). "Pooja Batra Makes Heads Turn in Action Thriller 'Killer Punjabi': Watch Trailer" இம் மூலத்தில் இருந்து 14 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160714041838/http://www.indiawest.com/entertainment/global/pooja-batra-makes-heads-turn-in-action-thriller-killer-punjabi/article_129e6124-e49e-11e5-9a6a-77a6da943d2e.html. 
  10. 10.0 10.1 "'I'm not his ex, Akshay Kumar is my ex'". 25 June 1997. http://www.rediff.com/movies/jun/25pooja1.htm. "'I'm not his ex, Akshay Kumar is my ex'". Rediff. 25 June 1997. Retrieved 1 May 2016.
  11. 11.0 11.1 "Biography". http://www.poojabatra.com/biography.html. 
  12. "Miss Indias who made it to Bollywood". http://photogallery.indiatimes.com/beauty-pageants/miss-india/miss-indias-who-made-it-to-bollywood/50-Years-of-Miss-India-Miss-Indias-who-made-it-to-7Bollywood/articleshow/19092168.cms. 
  13. "Good show". 31 May 1997. http://indiatoday.intoday.in/story/model-turned-actress-pooja-batra-receives-positive-reviews-for-her-debut-film-virasat/1/275873.html. 
  14. Ruhani, Faheem (9 September 2005). "Mughal premiere for 'Taj Mahal' in London". http://www.dnaindia.com/entertainment/report-mughal-premiere-for-taj-mahal-in-london-1504. 
  15. Gupta, Rakhee (18 January 2001). "Pooja Batra: Back to Bollywood". http://www.tribuneindia.com/2001/20010118/main7.htm. 
  16. Kaushal, Ruchi (7 November 2021). "Pooja Batra on missing from films: 'I haven't just been sitting and eating potatoes". Hindustan Times. https://www.hindustantimes.com/entertainment/bollywood/pooja-batra-on-missing-from-films-i-have-done-lot-of-american-shows-haven-t-just-been-sitting-and-eating-potatoes-101636193417227.html. 
  17. Iyer, Rohini (11 February 2003). "Pooja Batra, post marriage". Rediff. https://m.rediff.com/movies/2003/feb/11pooja.htm. 
  18. "Pooja Batra wants out". Mid Day. 28 January 2011. https://www.mid-day.com/entertainment/bollywood-news/article/Pooja-Batra-wants-out-110429. 
  19. "Former Miss India files for divorce". The New Indian Express. 2 February 2011. https://www.newindianexpress.com/entertainment/hindi/2011/feb/02/former-miss-india-files-for-divorce-224104.html. 
  20. Verma, Sukanya (15 December 2000). "Mukti foundation AIDS concert". http://www.rediff.com/entertai/2000/dec/15slide7.htm. 

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில்,
பூஜா பத்ரா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=பூஜா_பத்ரா&oldid=23131" இருந்து மீள்விக்கப்பட்டது