புவன கோசம்

வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரை மேற்கோள் நூல்களில் ஒன்று புவன கோசம். [1] பல பாடல்களில் நல்ல நடை இல்லை. என்றாலும் இது அக்காலத்தில் அண்டத்தைப்பற்றி எண்ணிப் பார்த்த நூல் என அறியமுடிகிறது.

பாடல் - எடுத்துக்காட்டு [2]

துன்னு முன் மனைமேல் அதன் மிசைக் காலம் தொழில் சிரம் தத்துவத்து
வன்ன மெய் நாமம் முதல் நடு இறுதி வயது இலை என்றி நீடு ஒளியாய்
முன்னரும் அருவாய் மலமுமாய் எல்லாம் முதன்மையோடு அறிவு அணு கிரகம்
அன்னவை உளவாம் சிவம்; அஃது அடையும்-அவர் பரமுத்தர் என்று அறியே [3]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 385. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
  3. ஞானாவரணம் 457 ஆம் பாடலில் உரை மேற்களாக எடுத்தாளப்பட்டுள்ள பாடல்.
"https://tamilar.wiki/index.php?title=புவன_கோசம்&oldid=17460" இருந்து மீள்விக்கப்பட்டது