புளியந்தோப்பு, சென்னை
புளியந்தோப்பு (English: Pulianthope) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]
புளியந்தோப்பு, சென்னை Pulianthope புளியந்தோப்பு | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°05′53″N 80°16′06″E / 13.098160°N 80.268320°ECoordinates: 13°05′53″N 80°16′06″E / 13.098160°N 80.268320°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | =Tamil Naduதமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 30 m (100 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600012 |
தொலைபேசி குறியீடு | 044xxxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | சு. அமிர்த ஜோதி, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | வடசென்னை |
சட்டமன்றத் தொகுதி | பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | கலாநிதி வீராசாமி |
சட்டமன்ற உறுப்பினர் | ஆர். டி. சேகர் |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புளியந்தோப்பு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°05′53″N 80°16′06″E / 13.098160°N 80.268320°E ஆகும். பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவை புளியந்தோப்பு பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
புளியந்தோப்பு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய ஆடுதொட்டி (ஆடுகள், மாடுகள் அறுக்கும் கூடம்) ஒன்று உள்ளது. வார நாட்களில் சுமார் 2,500 ஆடுகளும், சுமார் 300 மாடுகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 9,000 ஆடுகளும், 1,000 மாடுகளும் இறைச்சிக்காக இங்கு அறுக்கப்பட்டு, விற்பனை நிலையங்கள், உணவுக் கூடங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பப்படுகின்றன.[5]
புளியந்தோப்பு பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர் ஆவார். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ Savitha Ganesh (2022-08-09). "Stigma around Pulianthope: How does a neighbourhood become criminalised?" (in en-GB). https://chennai.citizenmatters.in/chennai-pulianthope-crime-marginalised-abattoir-caste-civic-isses-42204.
- ↑ S. Muthiah (2008) (in en). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India. Palaniappa Brothers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8379-468-8. https://books.google.com/books?id=tbR_LLkqdI8C&pg=PA37&dq=Pulianthope,+Chennai&hl=en&ved=2ahUKEwjpzcXtz7z9AhVHTGwGHeA4D28Q6AF6BAgGEAM#v=onepage&q=Pulianthope%252C%2520Chennai&f=false.
- ↑ Goel, S. L.; Kumar, Ram (2004) (in en). Administration and Management of NGOs: Text and Case Studies. Deep & Deep Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7629-570-3. https://books.google.com/books?id=xr6P6WC6Cs0C&pg=PA84&dq=Pulianthope,+Chennai&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwjpzcXtz7z9AhVHTGwGHeA4D28Q6AF6BAgKEAM#v=onepage&q=Pulianthope%252C%2520Chennai&f=false.
- ↑ Ramaswamy, L. Muthuraman, S. (2019-06-04) (in en). SOLID WASTE MANAGEMENT. MJP Publisher. https://books.google.com/books?id=-zibDwAAQBAJ&pg=PA150&dq=Pulianthope,+Chennai&hl=en&ved=2ahUKEwjpzcXtz7z9AhVHTGwGHeA4D28Q6AF6BAgHEAM#v=onepage&q=Pulianthope%252C%2520Chennai&f=false.
- ↑ "ஆடுதொட்டி சுகாதார சீர்கேட்டை கண்டித்து...சென்னையில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு - Dinamalar Tamil News" (in ta). 2010-05-25. https://m.dinamalar.com/detail.php?id=5819.