புட்ப பலன்
கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய நூல்களில் ஒன்றான புட்ப விதி என்னும் நூலோடு புட்ப பலன் என்னும் நூல் பலரால் பலமுறை சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிப்புகளில் இந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்னும் குறிப்பு உள்ளது. எனினும் கமலை ஞானப்பிரகாசரே இந்த நூலைச் செய்திருக்கலாம் எனக் கொள்ள இடம் உண்டு.
நந்தவன மகிமை, கோட்டுப் பூ, [1] கொடிப் பூ, நீர்ப் பூ, நிலப் பூ, வில்வம், துளசி, பிற இலைகள், புற்கள், வேர்கள் முதலானவற்றைப் போட்டுப் பூசை செய்வதால் உண்டாகும் பலன்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. [2]
அடிக்குறிப்பு
- ↑
- கோட்டுப்பூ என்னும் சொல்
காட்டியச் சூடினீர் என்று. (திருக்குறள்) - ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 216.