பி. கிருஸ்ணன்

பி. கிருஷ்ணன் (பிறப்பு மார்ச்சு 6 1947) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார் நன்றி artshouselimited.sg. இவர் மருந்தக உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துத் துறையில் இவர் நாணல் எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

பி. கிருஸ்ணன்
பி. கிருஸ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பி. கிருஸ்ணன்
பிறந்ததிகதி மார்ச்சு 6 1947
பிறந்தஇடம் மலேசியா
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1973 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் இதயகீதம் இலக்கிய இயக்கம் வெளியிடும் கவிதைத் தொகுப்பில் இவர் கவிதை சிறப்பிடம் பெற்றுள்ளது. மேலும் இவர் சமயச் சொற்பொழிவாளர், ஆழ்நிலைத் தியானம் பயிற்றுநர்

பரிசுகளும் விருதுகளும்

  • மலேசியத் தமிழ் பாவலர் மன்றம் பணமுடிப்பு வழங்கியுள்ளது. .
  • அரசாங்கம் சிறந்த சேவையாளர் விருதான PPC விருதும் (1995), PIS விருதும் (2001) வழங்கியுள்ளது.

நூல்கள்

புதுமைதாசன் என்ற பெயரில் 22 நூல்கள் எழுதியிருக்கிறார்.

  • இலக்கியக் காட்சிகள் (1990, இலக்கிய நாடகங்கள்)
  • புதுமைதாசன் கதைகள் (1993, சிறுகதைத் தொகுப்பு, சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பாராட்டு விருது பெற்றது)
  • அடுக்கு வீட்டு அண்ணாசாமி (2000, 2 தொகுப்பு - நாடகங்கள்)
  • சருகு (2006, உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதைகள் படைத்த சிறுகதைகளின் மாற்றுருவாக்க நாடக வடிவம் - தொகுப்பு)
  • விலங்குப்பண்ணை (2008, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அங்கத நெடுங்கதையின் மாற்றுருவாக்க நாடக வடிவம்)

புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் படைப்புகள் (மொழியாக்கம்)

  • மெக்பெத் (1996, Macbeth)
  • ஹேம்லெட் (2021, Hamlet)
  • ஒதெல்லோ (2021, Othello)
  • மன்னன் லியர் (2021, King Lear)
  • ஜூலியஸ் சீஸர் 2021, (Julius Caesar)
  • சூறாவளி (2021, The Tempest)
  • ரோமியோ ஜூலியட் (2021, Romeo and Juliet)

நாடகங்கள்

  • நல்ல வீடு
  • ஐடியா ஐயாக்கண்ணு
  • ஸ்கூட்டரோ ஸ்கூட்டர்!
  • விழிப்பு
  • மரணவலை
  • மர்ம மனிதன்
  • எதிர்நீச்சல்
  • மாடிவீட்டு மர்மம்
  • இரட்டை மனிதன்
  • கதாகாலட்சேபம்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=பி._கிருஸ்ணன்&oldid=6028" இருந்து மீள்விக்கப்பட்டது