பிளேடு ரன்னர்
பிளேடு ரன்னர் (ஆங்கிலம்: Blade Runner) 1982 ஆம் ஆண்டு ஒரு அறிபுனைத் திரைப்படம் ஆகும். ரிட்லி சுகாட்டினால் இயக்கப்பட்டது. ஹாரிசன் போர்ட், இரட்கர் ஹாவுவர், சான் யங், மற்றும் எட்வர்டு ஒல்ம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருங்காலத்து 2019 லாஸ் ஏஞ்சலஸ் மாநகரத்தில் அமையப்பெறுகிறது. இந்தக் காலகட்டத்தில், விண்வெளிக் குடியிருப்புகளில் பணி செய்ய செயற்கையான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். அவற்றில் சில செயற்கை மனிதர்கள் புவியிற்கு தப்பித்து மனிதர்களாய் வாழ்கின்றனர். காவலர் ரிக் டெக்கர்டிற்கு (ஃபோர்டு) இவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணி வழங்கப்படுகிறது. ஆனால் இவர் தயக்கம் காட்டுகிறார்.
பிளேடு ரன்னர் Blade Runner | |
---|---|
பிளேடு ரன்னரின் சுவரொட்டி | |
இயக்கம் | ரிட்லி சுகாட் |
தயாரிப்பு | மைக்கேல் டீலி |
திரைக்கதை |
|
இசை | வான்செலிசு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜோர்டன் குரொனன்வெத் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | சூன் 25, 1982 |
ஓட்டம் | 117 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா[2][3] Hong Kong[4] |
ஆக்கச்செலவு | $30 மில்லியன்[5] |
மொத்த வருவாய் | $41.5 மில்லியன்[6] |
இத்திரைப்படம் முதலில் அதிகம் வருவாய் ஈட்டவில்லை. சில விமர்சகர்கள் மட்டும் கதையின் சிக்கல்கள் மட்டும் திரைவண்ணங்களை புகழ்ந்தனர். வெறு சிலர் திரைப்படத்தின் குறைந்த வேகத்தினையும் குறைந்த சண்டைக் காட்சிகளையும் கடுமையாக விமர்சித்தனர். வருடங்கள் பிறகே பெரிதும் பாராட்டப்பட்டு, இவ்வகையான திரைப்படங்களிற்கு முன்மாதிரியாக மாறியது.
இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பிளேடு ரன்னர் 2049 அக்டோபர் 2017 இல் வெளிவந்தது.
பல்வேறு கருத்து மாறுபாடுகளினால் இத்திரைப்படத்திற்கு ஏழு வெவ்வேறு பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இரசிகர்களுக்காக 1992 ஆம் ஆண்டில் ரிட்லி சுகாட்டின் இயக்குநரின் வெட்டு வெளியிடப்பட்டது. இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு ஆக வெளியிடப்பட்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில், இத்திரைப்பட வெளியீட்டின் 25 வருட நிறைவினை கொண்டாட, வார்னர் புரோஸ். பிளேடு ரன்னரின் இறுதி வெட்டினை வெளியிட்டது. இயக்குனர் ரிட்லி சுகாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப அமையப்பெற்று வெளியிடப்பட்ட பதிப்பு இது மட்டுமே.
தயாரிப்பு
நடிகர்கள்
இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக ஹீரோ பாத்திரத்திற்கு.[7] பல மாதங்களாக இயக்குனர் ரிட்லி சுகாட்டும் தயாரிப்பாளர்களும் டசுடின் ஹாஃப்மனினை நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கருத்து வேறுபாடுகளினால் வெளியேறினார்.[7] ஹாரிசன் ஃபோர்ட் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும், ஃபோர்டின் பிளேடு ரன்னர் ஈடுபாட்டிற்காகவும், இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் பரிந்துரையாளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] திரைப்பட தயாரிப்பு கோப்புகளின்படி, ஜீன் ஹாக்மன், சான் கானரி, ஜாக் நிக்கல்சன், பால் நியூமன், கிளின்ட் ஈஸ்ட்வுட், டாம்மி லீ ஜோன்சு, ஆர்னோல்டு சுவார்செனேகர், அல் பசீனோ மற்றும் பர்ட் ரெனால்ட்சு ஆகியோர் ஹீரோ பாத்திரத்திற்காக கண்டறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.[7]
பிளேடு ரன்னர் திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.[9][7]
இசை
சாரியட்ஸ் ஆப் பயர் திரைப்படத்திற்கு இசையமைத்து, அதற்கு ஆசுக்கர் விருதினை வென்ற வான்செலிசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். [10]
திரை வண்ணங்கள்
பிளேடு ரன்னர் திரைப்படத்தின் திரைவண்ணங்கள் மற்றும் அசைவூட்டங்கள் இன்றுவரை பெரிதும் பாராட்டப்படுகிறது. அக்காலத்து தொழிநுட்பங்கள் அனைத்து அதன் முழுமைக்கும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. திரைப்படமாக்கலில் புதுவிதமான தொழில்நுட்பங்களைப் உருவாக்கி பயன்படுத்தியமைக்கு இத்திரைப்படத்தின் அசைவூட்ட பொறியியலாளர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர்.[11]சில நுட்பங்கள் குலோசு என்கவுன்டர்சு ஆஃப் த தெர்டு கைன்டு திரைப்பட தயாரிப்பின் பொழுது உருவாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்பட்டன. [12]
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
பிளேடு ரன்னர் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டு, அதில் சிலவற்றினையும் வென்றது.[13]
ஆண்டு | விருது | பிரிவு | முடிவு |
---|---|---|---|
1982 | லாஸ் ஏஞ்சலசு திரைப்பட விமர்சகர்கள் குழுமம் | சிறந்த ஒளிப்பதிவு | Won |
1983 | பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் | சிறந்த ஒளிப்பதிவு | Won |
சிறந்த உடை அமைப்பு | Won | ||
சிறந்த தொகுப்பு | Nominated | ||
சிறந்த இசை | Nominated | ||
சிறந்த ஒப்பனை | Nominated | ||
சிறந்த தயாரிப்பு | Won | ||
சிறந்த ஒலி | Nominated | ||
சிறந்த திரை வண்ணங்கள் | Nominated | ||
ஹியூகோ விருது | சிறந்த நாடகப்படம் | Won | |
இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் குழு | சிறப்பு விருது | Won | |
கோல்டன் குளோப் விருதுகள் | சிறந்த அசல் இசை | Nominated | |
அகாதமி விருது | சிறந்த தயாரிப்பு | Nominated[14] | |
சிறந்த திரை வண்ணங்கள் | Nominated[15][16] | ||
சனி விருதுகள் | சிறந்த இயக்குனர் | Nominated | |
சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படம் | Nominated | ||
சிறந்த திரைவண்ணங்கள் | Nominated | ||
சிறந்த துணை நடிகர் | Nominated | ||
பேன்டாசுபோர்டோ | சர்வதேச திரைப்பட விருது | Nominated | |
1993 | பேன்டாசுபோர்டோ | சர்வதேச திரைப்பட விருது | Nominated |
1994 | சனி விருதுகள் | சிறந்த காணொளி வெளியீடு | Nominated |
2008 | சிறந்த காணொளி வெளியீடு | Won |
வரவேற்பு
பல்வேறு சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது,
ஆண்டு | வழங்கியவர் | பட்டியல் | இடம் | மேற். |
---|---|---|---|---|
2001 | தி வில்லேஜ் வாய்சு | இருபதாம் நூற்றாண்டின் சிறந்த 100 திரைப்படங்கள் | 94 | [17] |
2002 | OFCS | கடந்த 100 ஆண்டிகளின் சிறந்த 100 அறிவிய புனைவுத் திரைப்படங்கள் | 2 | [18] |
சைட் & சவுண்டு | 2002 பட்டியல் | 45 | [19] | |
50 கிளாசிக்கர், பிலிம் | இல்லை | [20] | ||
2003 | இறப்பதற்கு முன் பார்க்கவேண்டிய 1001 திரைப்படங்கள் | [21] | ||
என்டர்டெயின்மெண்ட் வீக்லி | தீவிர இரசிகர்கள் கொண்ட சிறந்த 50 திரைப்படங்கள் | 9 | [22] | |
2004 | தி கார்டியன், அறிவியலாளர்கள் | அனைத்து காலத்து சிறந்த 10 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் | 1 | [23][24][25] |
2005 | டோட்டல் பிலிம் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | 47 | [26] |
டைம் இதழின் விமர்சகர்கள் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | இல்லை | [27][28][29] | |
2008 | நியூ சயின்டிசுடு | அனைத்து காலத்து சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் | 1 | [30][31] |
எம்பையர் | அனைத்து காலத்து சிறந்த 500 திரைப்படங்கள் | 20 | [32] | |
2010 | ஐஜிஎன் | அனைத்து காலத்து சிறந்த 25 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் | 1 | |
டோட்டல் பிலிம் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | இல்லை | [33] | |
2012 | சைட் & சவுண்டு' | 2012 விமர்சகர்கள் - சிறந்த 250 திரைப்படங்கள் | 69 | [34] |
சைட் & சவுண்டு' | 2012 இயக்குனர்கள் - சிறந்த 100 திரைப்படங்கள் | 67 | [35] | |
2017 | எம்பையர் | அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் | 13 |
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "பிளேடு ரன்னர்". British Board of Film Classification. மே 27, 1982 இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 22, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160322161256/http://bbfc.co.uk/releases/blade-runner-film-1.
- ↑ "Blade Runner". American Film Institute இம் மூலத்தில் இருந்து நவம்பர் 6, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151106110252/http://www.afi.com/members/catalog/DetailView.aspx?s=&Movie=68260.
- ↑ "Blade Runner". பிரித்தானியத் திரைப்பட நிறுவனம் இம் மூலத்தில் இருந்து திசம்பர் 6, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151206122316/http://www.bfi.org.uk/whats-on/bfi-film-releases/blade-runner-final-cut.
- ↑ "Blade Runner (1982)". பிரித்தானியத் திரைப்பட நிறுவனம் இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 15, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170215022709/http://www.bfi.org.uk/films-tv-people/4ce2b69ac89d8. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2018.
- ↑ Gray, Tim (சூன் 24, 2017). "'Blade Runner' Turns 35: Ridley Scott's Unloved Film That Became a Classic" இம் மூலத்தில் இருந்து சூலை 5, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170705010740/https://variety.com/2017/film/news/blade-runner-1982-unloved-classic-1202476755/. பார்த்த நாள்: சூலை 31, 2019.
- ↑ "Blade Runner (1982)" இம் மூலத்தில் இருந்து மே 15, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200515161512/https://www.boxofficemojo.com/title/tt0083658/. பார்த்த நாள்: மே 15, 2020.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 "Dangerous Days: Making பிளேடு ரன்னர் [documentary]", Blade Runner: The Final Cut (DVD), வார்னர் புரோஸ்., 2007 [1982]
- ↑ "Ford: 'Blade Runner Was a Nightmare'", Moono.com, சூலை 5, 2007, archived from the original on பிப்ரவரி 24, 2012, retrieved சூலை 27, 2011
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Sammon, ப. 92–93.
- ↑ Vangelis, "Blade Runner – Scoring the music", NemoStudios.co.uk, archived from the original on அக்டோபர் 19, 2013, retrieved சூலை 27, 2011[self-published source]
- ↑ Dalton, Stephen (அக்டோபர் 26, 2016). "Blade Runner: anatomy of a classic" பரணிடப்பட்டது 2017-10-15 at the வந்தவழி இயந்திரம். பிரித்தானியத் திரைப்பட நிறுவனம்.
- ↑ "Blade Runner: Spinner Vehicles", DouglasTrumbull.com, Trumbull Ventures, 2010, archived from the original on சூலை 4, 2015, retrieved செப்டம்பர் 21, 2015[self-published source]
- ↑ "பிளேடு ரன்னர்", The New York Times, archived from the original on மே 17, 2013, retrieved சூலை 27, 2011
- ↑ Gandhi Wins Art Direction and Cinematography: 1983 ஆசுக்கர்கள்
- ↑ 1983|Oscars.org
- ↑ E.T. The Extra-Terrestrial Wins Visual Effects: 1983 ஆசுக்கர்கள்
- ↑ ஹொபர்மன், ஜெ.; Village Voice Critics' Poll (2001), "100 Best Films of the 20th Century", The Village Voice, archived from the original on மார்ச்சு 31, 2014, retrieved சூலை 27, 2011 – via FilmSite.org
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "OFCS Top 100: Top 100 Sci-Fi Films", OFCS.org, Online Film Critics Society, சூன் 12, 2002, archived from the original on மார்ச்சு 13, 2012, retrieved சூலை 27, 2011
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sight & Sound Top Ten Poll 2002", Sight & Sound, பிரித்தானியத் திரைப்பட நிறுவனம், 2002, archived from the original on மே 15, 2012, retrieved பிப்ரவரி 4, 2018 – via BFI.org.uk
{{citation}}
: Check date values in:|access-date=
(help) - ↑ சுரோடர், நிக்கோலசு (2002), 50 Klassiker, Film (in German), Gerstenberg, ISBN 978-3-8067-2509-4
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 1001 Movies to See Before You Die, சூலை 22, 2002, archived from the original on மே 28, 2014, retrieved பிப்ரவரி 4, 2011 – via 1001BeforeYouDie.com
{{citation}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Top 50 Cult Movies", என்டர்டெயின்மெண்ட் வீக்லி, மே 23, 2003, archived from the original on மார்ச்சு 31, 2014, retrieved சூலை 27, 2011
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Top 10 sci-fi films", The Guardian, archived from the original on சூலை 25, 2013, retrieved சூலை 27, 2011
- ↑ Jha, Alok (ஆகத்து 26, 2004), "Scientists vote பிளேடு ரன்னர் best sci-fi film of all time", The Guardian, archived from the original on மார்ச்சு 8, 2013, retrieved சூலை 27, 2011
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "How we did it", The Guardian, ஆகத்து 26, 2004, archived from the original on சூலை 26, 2013, retrieved சூலை 27, 2011
- ↑ "Film news: Who is the greatest?", டோட்டல் பிலிம், Future Publishing, அக்டோபர் 24, 2005, archived from the original on சனவரி 23, 2014, retrieved சூலை 27, 2011
- ↑ "The Complete List – All-Time 100 Movies", டைம், மே 23, 2005, archived from the original on ஆகத்து 22, 2011, retrieved சூலை 27, 2011
- ↑ "All-Time 100 Movies", Time, பிப்ரவரி 12, 2005, archived from the original on ஆகத்து 31, 2011, retrieved சூலை 27, 2011
{{citation}}
: Check date values in:|date=
(help) - ↑ Corliss, Richard (பிப்ரவரி 12, 2005), "All-Time 100 Movies: பிளேடு ரன்னர் (1982)", Time, archived from the original on மார்ச்சு 5, 2011, retrieved சூலை 27, 2011
{{citation}}
: Check date values in:|date=
and|archive-date=
(help) - ↑ George, Alison (நவம்பர் 12, 2008), "Sci-fi special: Your all-time favourite science fiction", New Scientist, archived from the original on ஏப்ரல் 6, 2014, retrieved சூலை 27, 2011
- ↑ George, Alison (அக்டோபர் 1, 2008), "New Scientist's favourite sci-fi film", New Scientist, archived from the original on ஏப்ரல் 6, 2014, retrieved சூலை 27, 2011
- ↑ "எம்பையர் அம்சங்கள்", எம்பையர், archived from the original on அக்டோபர் 14, 2013, retrieved சூலை 26, 2011
- ↑ "Film Features: 100 Greatest Movies of All Time", Total Film, Future Publishing, archived from the original on திசம்பர் 22, 2013, retrieved சூலை 27, 2011
- ↑ "Sight & Sound 2012 critics top 250 films", Sight & Sound, பிரித்தானியத் திரைப்பட நிறுவனம், 2012, archived from the original on அக்டோபர் 26, 2013, retrieved செப்டம்பர் 20, 2012 – via BFI.org
- ↑ "Sight & Sound 2012 directors top 100 films", Sight & Sound, பிரித்தானியத் திரைப்பட நிறுவனம், 2012, archived from the original on ஏப்ரல் 18, 2014, retrieved செப்டம்பர் 20, 2012 – via BFI.org
புத்தகங்கள்
- Brooker, Will, தொகுப்பாசிரியர் (2005). த பிளேடு ரன்னர் அனுபவம். இலண்டன்: Wallflower. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-904764-30-4.
- Bukatman, Scott (1997). BFI Modern Classics: பிளேடு ரன்னர். London: பிரித்தானியத் திரைப்பட நிறுவனம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85170-623-8. https://archive.org/details/bladerunner0000buka.
- Eagan, Daniel (2010) America's Film Legacy: The Authoritative Guide to the Landmark Movies in the National Film Registry, A&C Black, ISBN 0826429777, pages 775–776
- Kerman, Judith, தொகுப்பாசிரியர் (1991). Retrofitting பிளேடு ரன்னர்: Issues in Ridley Scott's பிளேடு ரன்னர் and Philip K. Dick's Do Android's Dream of Electric Sheep?. Bowling Green University Popular Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87972-510-5.
- Macarthur, David (2017). "A Vision of Blindness: பிளேடு ரன்னர் and Moral Redemption". Film-Philosophy 21 (3): 371–391. doi:10.3366/film.2017.0056. http://www.euppublishing.com/toc/film/21/3.
- Morgan, David. பிளேடு ரன்னர் at National Film Registry
- Sammon, Paul M. (1996). Future Noir: the Making of பிளேடு ரன்னர். London: Orion Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-06-105314-6. https://archive.org/details/futurenoirmakin00samm.