பிரான்ஸ் தலித் மாநாடு

பிரான்ஸ் தலித் மாநாடு பிரான்ஸ் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியிரால் முதன்முறையாக ஒக்டோபர் 20, 21 2007 காலப்பகுதிகளில் பாரிசில் நடைபெறுகிறது. "இலங்கைத் தலித்மக்களின் எதிர்கால சமூக பொருளாதார அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டது." [1]

இந்த மாநாடு தமிழ்த் தேசியத்துக்கு, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துப் போக்கை கொண்டுள்ளது என சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

புகலிடத்தில் சாதியம்

இந்த மாநாடு இலங்கைத் தமிழர்கள் புகலிடத்தில் சாதி தொடர்பாக மேற்கொள்ளும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். புகலிடத்தில் சாதிய சமூகக் கட்டமைப்பின் அழுத்தம் இறுக்கமாக தொடர முடியாவிட்டாலும், திருமணம், ஊர் ஒன்றியங்கள் ஊடாக புகலிடங்களிலும் சாதியக் கட்டமைப்பின் தாக்கம் தொடர்ந்து இருந்தே வருகின்றது என்பது இங்கு குறிக்கத்தக்கது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரான்ஸ்_தலித்_மாநாடு&oldid=26368" இருந்து மீள்விக்கப்பட்டது