பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்
பிரான்மலை உமாமகேசுவரர் கோயில் (கொடுங்குன்றம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில்[1] திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீசுவரர் இறைவி அமுதாம்பிகை.
தேவாரம் பாடல் பெற்ற பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம் |
பெயர்: | பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பிரான்மலை |
மாவட்டம்: | சிவகங்கை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருக்கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர் |
தாயார்: | குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள் |
தல விருட்சம்: | உறங்காப்புளி |
தீர்த்தம்: | மதுபுசுகரிணி |
ஆகமம்: | காரணாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சித்திரைத்திருவிழா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் |
கோயிலின் சிறப்புகள்
இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலியானது, 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31.