பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்

பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் (பி.கீ.ஆ.க, French: École française d'Extrême-Orient, EFEO) என்பது ஒரு பிரான்சிய நிறுவனம். இது ஆய்வுநோக்கில் ஆசியக் குமுகங்களைப் பற்றி அறிந்துகொள்ள 1900 ஆம் ஆண்டில் வியட்நாம் தலைநகர் ஆனோயில் தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. வியட்நாமின் விடுதலைக்குப் பின்பு, ஆய்வுக் கல்விக்கூடத்தின் தலைமையிடம் பாரிசுக்கு மாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய ஆய்வு தளங்கள் தொல்லியல், பனுவலியல் (philology) , மற்றும் தற்கால ஆசிய சமுதாயங்கள் ஆகும். 1907 முதல் இந்நிறுவனம் ஆங்கோரில் உள்ள தொல்லியல் களத்தைக் காப்பதில் பொறுப்பு வகிக்கின்றது.

புதுச்சேரி EFEO மையம்
பாரிசில் உள்ள பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் (பி.கீ.ஆ.க) (École française d'Extrême-Orient (EFEO)

சில இயக்குநர்கள்

சீன மொழிக்கான பி.கீ.ஆ.க (EFEO) உரோமன் எழுத்தாக்க முறை

19-ம் நூற்றாண்டில், மண்டரின் மொழிக்கு (சீன மொழிக்கு) தகுந்த ஓர் உரோமன் எழுத்தாக்க முறை ஒன்றை பி.கீ.ஆ.க உருவாக்கியது. இது வேடு-கைல்சு (Wade-Giles) முறையோடும் பின்யின் (Pinyin) எனப்படும் எழுத்து முறையோடும் சில ஒற்றுமைகள் கொண்டது. தற்காலத்தில் பின்யின் முறையே மேலோங்கியும் வழக்கிலும் உள்ளது.

இந்த மூன்று எழுத்துப்பெயர்ப்பு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்:

IPA EFEO WG Pinyin
p p p b
p' p' p
t t t d
t' t' t
k k k g
k' k' k
ts ts ts z
tsʰ ts' ts' c
tch ch zh
tʂʰ tch' ch' ch
k/ts ch j
tɕʰ k'/ts' ch' q
ɕ s/h hs x
w ou/w w w
j i/y y y
ɤ ö/é o/ê e
ɚ eul êrh er
eu û i
ʐ e ih i
y u ü ü/u
u ou u u
ən en ên en
ɤŋ eng êng eng
ie ieh ie
iɤʊ ieou/iou iu iu
iɛn ien ien ian
uo ouo o/uo o/uo
uaɪ ouai uai uai
ueɪ ouei ui ui
uan ouan uan uan
uən ouen un un
iue üeh üe/ue
yɛn iuen üan üan/uan
yn iun ün ün/un
iʊŋ ioung iung iong

ஆய்வுக் கல்விக்கூடத்தின் நடுவங்கள்

வெளி இணைப்புகள்

Coordinates: 48°51′52″N 2°17′32″E / 48.86444°N 2.29222°E / 48.86444; 2.29222