பிரம்மச்சாரி (1992 திரைப்படம்)

பிரம்மச்சாரி (Brahmachari) என்பது 1992 ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படத்தில் நிழல்கள் ரவி மற்றும் கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். ரவி மற்றும் ஆர். கோவிந்த் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு, தேவா இசை இசை அமைத்துள்ளார். 15 சனவரி 1992 இல் இப்படம் வெளியானது.[1][2][3]

பிரம்மச்சாரி
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎஸ். ரவி
ஆர். கோவிந்த்
கதைபாபு-கோபு (உரையாடல்)
திரைக்கதைமுக்தா சீனிவாசன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுமுக்தா எஸ். சுந்தர்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்முக்தா பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 15, 1992 (1992-01-15)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

கணேசன் ( நிழல்கள் ரவி ) ஒரு திருமணமாகாத இளைஞன், விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். கணேசனும் அவனது நண்பர் பஞ்சவர்ணமும் ( சார்லி ) ஏற்ற மணப்பெண்ணைத் தேடுகிறார்கள். பின்னர், கணேசன் சந்திக்கும் மாலதியை ( கௌதமி ) முதல் பார்வையிலேயே காதலிக்கிறான். அவன் எல்லா இடங்களிலும் அவளைப் பின்தொடர்கிறான். மேலும் அவளை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைச் சொல்கிறான். முதலில், மாலதி இதை மறுத்தாலும், பின்னர் அவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். மாலதி ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளது தந்தை பெரிய திருவடி ( வெண்ணிற ஆடை மூர்த்தி ) தனக்கு ஒரு பணக்காரர் மருமகனாக வரவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் கணேசனோ ஒரு ஏழை. துபாயில் இருந்து கணேசனின் மாமா ( ஜனகராஜ் ) வருகிறார், அவர் பணக்காரர் என்று காதலர்கள் நினைக்கிறார்கள். செய்தி அறிந்த திருவாடி அவர்களின் திருமணத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவரது மாமா துபாயில் ஒரு எளிய சிகையலங்கார நிபுணர் மட்டுமே. அவர் ஒரு பணக்காரர் என்ற பொய்யை மாலதி, கணேசன், அவரது மாமா ஆகியோர் திருமணத்தின் இறுதி வரை காப்பாற்ற முடிவு செய்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள்

இசை

திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் ஆகியவற்றுக்கு திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார். 1992 இல் வெளியான இந்த படத்தின் பாடல் பதிவில் வாலி, வைரமுத்து ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 "நான் தானே பிரம்மச்சாரி" மனோ, குழுவினர் வாலி 4:13
2 "ஹார்ட்டு பீட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா, குழுவினர் வைரமுத்து 4:41
3 "தென்காசி தென்னை" மனோ, ஸ்வர்ணலதா 4:26
3 "வைகை நதி" எஸ். என். சுரேந்தர், உமா ரமணன் வாலி 4:19
5 "தமிழ்நாடு தாய்க்குலமே" கிருஷ்ணராஜ் 4:34

குறிப்புகள்