பாவனா சோமயா
பாவனா சோமயா (Bhawana Somaaya) [1] ஓர் இந்திய திரைப்பட பத்திரிகையாளரும், விமர்சகரும், எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும் ஆவார். 2017ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி அவர்களால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2] 1978இல் திரைப்பட நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1980கள் மற்றும் 1990களில் பல திரைப்பட பத்திரிகைகளுடன் வேலைக்குச் சென்றார். இறுதியில், இவர் 2000 முதல் 2007 வரை ஸ்கிரீன் என்ற முன்னணி திரைப்பட இதழின் ஆசிரியராக இருந்தார். சலாம் பாலிவுட் (2000), தி ஸ்டோரி சோ ஃபார் (2003) மற்றும் இவரது முத்தொகுப்பு, அமிதாப் பச்சன் - தி லெஜண்ட் (1999), அமிதாப் பச்சன் (2009) மற்றும் அமிதாப் லெக்சிகன் (2011), பச்சனாலியா - தி ஃபிலிம்ஸ் அண்ட் மெமோராபிலியா உட்பட இந்தித் திரைப்படத்தின் வரலாறு மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு பற்றி 13க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் . [3] [4]
பாவனா சோமயா | |
---|---|
2000இல் பாவனா சோமயா | |
பணி | திரைப்பட விமர்சகர், திரைப்பட வரலாறு, ஸ்கிரீன் திரைப்பட பத்திரிக்கையின் ஆசிரியர் (2000–2007) |
செயற்பாட்டுக் காலம் | 1978 – தற்போது வரை |
வலைத்தளம் | |
www |
ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்
பாவனா மும்பையில் தனது பெற்றோருக்கு எட்டு உடன்பிறப்புகளில் இளைய குழந்தையாக பிறந்து வளர்ந்தார்.பின்னர், மும்பையில் உள்ள சியோனில் உள்ள மை லேடி ஆஃப் குட் கவுன்சில் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், அந்தேரி மேற்கில் உள்ள வல்லப சங்கீதாலயா நாட்டியப்பள்ளியில் பரதநாட்டியத்திலும் பயிற்சி பெற்றார்.
தனது பள்ளிப்படிப்புக்குப் பிறகு, உளவியலில் பட்டம் பெற்றார். மும்பை, மும்பை பல்கலைக்கழகத்தின் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் (குற்றவியல்) பட்டம் பெற்றார். இவர் மும்பை கேசி கல்லூரியில் ஊடகவியல் பற்றியும் படித்தார். [5]
தொழில்
பாவனா சோமயா 1978இல் திரைப்பட பத்திரிகையாளராகவும் ஒரு கட்டுரையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், திரைப்பட வார இதழான பிரீ பிரஸ் ஜர்னலால் வெளியிடப்பட்ட "சாதாரணமாக பேசுவது" என்ற கட்டுரையை எழுதினார். சூப்பர் என்ற பத்திரிக்கையில் (1980-1981) பணிபுரிந்த பிறகு , இந்தியா புக் ஹவுஸால் வெளியிடப்பட்ட மூவி என்ற இதழில் உதவி ஆசிரியராக சேர்ந்து 1985இல் இணை ஆசிரியரானார், 1988 வரை இங்கு பணியாற்றினார். 1989ஆம் ஆண்டில், சித்ரலேகா குழுமத்தின் திரைப்பட இதழான 'ஜி' (G) இன் ஆசிரியரானார். இதைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான புகழ்பெற்ற திரைப்பட வார இதழான 'ஸ்கீரின்' பத்திரிக்கையில் ஆசிரியராக இவர் பணியாற்றினார்.[6][7]
இதற்கிடையில், இவர் நடிகை சபனா ஆசுமிமிக்கு காம்யாப் (1984), பாவனா (1984), ஆஜ் கா எம்.எல்.ஏ. ராம் அவ்தார் (1984) மற்றும் மெயின் ஆசாத் ஹூன் (1989) போன்றத் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2008 இல், தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான சுவஸ்திக் பிக்சர்ஸில் சேர்ந்து அம்பர் தாரா என்ற ஒரு நாடகத் தொடரின் ஊடக ஆலோசகராக தொலைக்காட்சிக்கு மாறினார். [8] மே 2012 இல், ரிலையன்ஸ் மீடியாவின் பண்பலை வானொலி நிலையமான பிக் வானொலி (BIG FM 92.7) என்ற பண்பலை வானொலியில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று திரைப்பட விமர்சகராக இவர் தனது விமர்சனத்தை ஒளிபரப்பத் தொடங்கினார். [9] 2012இல், இவர் புதிதாக தொடங்கப்பட்ட திரைப்பட வர்த்தக இதழான பிளாக்பஸ்டரில் சேர்ந்தார். [10]
மேற்கோள்கள்
- ↑ Her name is often misspelled as Bhavana Somaiya or Bhavana Somaya.
- ↑ IANS (28 January 2017). "Humbled, honoured to receive Padma Shri: Bhawana Somaaya". Business Standard.
- ↑ "March of the botox brigade". தி டிரிப்யூன். 23 July 2011. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
- ↑ Aradhika Sharma (14 August 2011). "Bollywood chronicler". The Sunday Tribune. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
- ↑ Farhana Farook (12 July 2013). ""Mr. Bachchan never compliments me" – Bhawana Somaaya". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
- ↑ Farhana Farook (12 July 2013). ""Mr. Bachchan never compliments me" – Bhawana Somaaya". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013.
- ↑ "Bhawana Somaaya: Journalist". Archived from the original on 28 January 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
- ↑ "Bhawana Somaaya joins Swastik Pictures". Mint. 21 February 2008. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
- ↑ "Bhawana Somaaya to host Paisal Vasool show on BIG FM". .medianewsline.com. Archived from the original on 31 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bhawana Somaaya: Journalist". Archived from the original on 28 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unfit URL (link). Archived from the original பரணிடப்பட்டது 2013-01-28 at the வந்தவழி இயந்திரம் on 28 January 2013. Retrieved 19 August 2013.