பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர் அல்லர்.வியாச பாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப் பாடி வெளியிட்டமையால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பெற்றார். இவர் பிறந்தது தொண்டை நாடு எனத் தொண்டை மண்டலம் குறிப்பிடுகின்றது. சங்கநூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தவர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர். இவரது கடவுள் வாழ்த்துப் பாடல்களை நூலுக்குத் தொடக்கப் பாடலாக இணைத்துள்ளார்.[1]
இவரது பாடல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு[2] ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக அமைந்துள்ளன.
- காலம்
நூல் | கடவுள் | நூலின் எண்ணிக்கைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா? |
---|---|---|
அகநானூறு | சிவன் | இல்லை |
ஐங்குறுநூறு | சிவன் | இல்லை |
குறுந்தொகை | முருகன் | இல்லை |
நற்றிணை | திருமால் | இல்லை |
புறநானூறு | சிவன் | ஆம் |
இவரால் பாடப்பட்ட பாரத வெண்பாக்கள் 818 தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.
அடிக்குறிப்பு
- ↑ பாரதம் பாடிய பெருந்தேவனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ புறநானூறு 1 கடவுள் வாழ்த்துப் பாடல்
- ↑ மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, பக்கம் 3
- ↑ மு. அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பக்கம் 19