பாம்பு (சீன சோதிடம்)
பாம்பு என்பது சீன சோதிடத்தில் கூறப்படும் ஆறாவது இராசிக் குறியீடு ஆகும். இந்த இராசியில் பிறந்தவர்கள் அமைதியும், சிக்கனமும், சாகச குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
பெயர்க்காரணம்
பாம்பு ஆறாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது. முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு பெரிய ஆற்றைக் கடக்கும் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன் ஆகியவற்றை தொடர்ந்து பாம்பு ஆறாவதாக வந்தது. ஏழாவதாக வந்த குதிரை, கரையை நெருங்கும் பொழுது அதன் குழம்பிலிருந்து பாம்பு வெளியே வந்தது. அதைக்கண்டு பயந்து போன குதிரை சற்று பின்வாங்கியது. இதை பயன்படுத்திக்கொண்டு பாம்பு ஆறாவதாக கரையை அடைந்தது. இதனால் பாம்பை கடவுள் ஆறாவது வருடக்குறியாக அறிவித்தார்.
இயல்புகள்
நேரம் | இரவு 9:00 முதல் 11:00 வரை |
உரிய திசை | தெற்கு, தென் கிழக்கு |
உரிய காலங்கள் | வசந்த காலம் (மே மாதம்) |
நிலையான மூலகம் | நெருப்பு |
யின்-யான் | யின் |
ஒத்துப்போகும் விலங்குகள் | சேவல், எருது |
ஒத்துப்போகாத விலங்குகள் | பன்றி, குரங்கு |
இராசி அம்சங்கள்
இராசி எண்கள் | 1, 2, 4, 6, 13, 24, 42, 46 |
இராசி நிறம் | சிகப்பு, நீலம் |
இராசிக் கல் | வைடூரியம் |
பாம்பு வருடத்தைய பிரபலங்கள்
பாம்பு வருடத்தில் உதயமான நாடுகள்
இதையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள்
- Chinese Astrology online calculator
- Chinese astrology website with software and online calculator
- Chinese Zodiac Chart
- Chinese astrology and Feng Shui international network பரணிடப்பட்டது 2010-06-04 at the வந்தவழி இயந்திரம்
- Chinese Animal Signs Website பரணிடப்பட்டது 2011-10-24 at the வந்தவழி இயந்திரம்
- Bazi Destiny (八字命理) Life Analysis
- Chinese Astrology (Ba Zi) free articles, professional training, distant support