பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் (தஞ்சாவூர்) (Papanasam block) , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து நான்கு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாபநாசத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,975 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 27,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 80 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஆதனூர்
- ஆலவண்டிபுரம்
- இராமானுஜாபுரம்
- இராஜகிரி
- இலுப்பைகோரை
- ஈச்சங்குடி
- உமையாள்புரம்
- உம்பாலபாடி
- உள்ளிகடை
- ஓலைப்பாடி
- கணபதிஅக்ரஹாரம்
- கபிஸ்தலம்
- கூனஞ்சேரி
- கொந்தகை
- கோபுராஜபுரம்
- கோவிந்தநாட்டுச்சேரி
- சக்கரபள்ளி
- சத்தியமங்கலம்
- சரபோஜிராஜபுரம்
- சாருக்கை
- சூலமங்கலம்
- சோமேஸ்வரபுரம்
- தியாகசமுத்திரம்
- திருமந்தன்குடி
- திரும்பூர்
- திருவாய்கவூர்
- பசுபதிகோயில்
- பண்டாரவாடை
- பெருமாள்கோயில்
- மணலூர்
- மேலகபிஸ்தலம்
- ரெங்குநாதபுரம்
- வலுதூர்
- வீரமாங்குடி