பாத்திமா சகாரியா

பாத்திமா சகாரியா (Fatima Zakaria) இந்தியாவைச் (17 பிப்ரவரி 1936 - 6 ஏப்ரல் 2021) சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். மும்பை டைம்சு பத்திரிகையின் ஆசிரியராகவும் பின்னர் தி டைம்சு ஆஃப் இந்தியாவின் பத்திரிகையின் ஞாயிறு கிழமை பதிப்பின் ஆசிரியராகவும் இவர் இருந்தார். தாச்சு உணவு விடுதிகள் குழுமம் வெளியிடும் தாச்சு பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பாத்திமா சகாரியா
Fatima Zakaria
பிறப்பு17 பிப்ரவரி 1936[1][2]
மும்பை, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2021 ஏப்ரல் 6
அவுரங்காபாத், மகாராட்டிரம், மகாராட்டிரம்
படித்த கல்வி நிறுவனங்கள்இசபெல்லா தோபர்ன் கல்லூரி[3]
வாழ்க்கைத்
துணை
ரஃபீக் சகாரியா
பிள்ளைகள்பரீத் சகாரியா உட்பட 4
விருதுகள்பத்மசிறீ (2006)

தொழில்

1958 ஆம் ஆண்டு பாத்திமா மும்பையில் குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் பெண்கள் தொழில்துறை இல்லம் ஒன்றை நிறுவினார். இந்நிறுவனம் 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தது.

1963 ஆம் ஆண்டு பாத்திமா சகாரியா இந்தியாவில் வெளியிடப்பட்டு வந்த இல்லசுட்ரேட்டடு வீக்லி ஆஃப் இந்தியா என்ற வாரப் பத்திரிகையில் குழந்தைகள் பிரிவு கட்டுரையாளராக பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மற்றும் பத்திரிகையாளர் குசுவந்த் சிங்கின் உதவி ஆசிரியராக இவர் பணியாற்றினார். 1970 ஆம் ஆண்டு டைம்சு ஆஃப் இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் அதன் ஞாயிறு நாளிதழின் பதிப்பாசிரியராக உயர்ந்தார். [4] ஓர் பத்திரிகை ஆசிரியராக, இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், யே.ஆர்டி டாடா, செயபிரகாசு நாராயண் மற்றும் அப்போதைய பிரதமர் மொரார்சி தேசாய், சரண் சிங் போன்ற முக்கிய பிரமுகர்களை பாத்திமா பேட்டி கண்டார்.

ஔரங்காபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், தாச்சு ரெசிடென்சி என்ற முதல் தர ஐந்து நட்சத்திர உணவு விடுதியை நிறுவுவதற்காக பாத்திமா தாச்சு குழும உணவு விடுதியில் சேர்ந்தார். இக்குழுமத்தின் தாச்சு காபி டேபிள் இதழின் ஆசிரியரானார். [5] இவரது அலுவலகம் மும்பையில் உள்ள தாச்சுமகால் உணவு விடுதியில் இருந்தது. அதன் பிறகு பாத்திமா ஒரு பிரித்தானிய பல்கலைக்கழகத்துடன் கூட்டாக இணைந்து ஒரு உணவுவிடுதி மேலாண்மை படிப்பை அறிமுகப்படுத்தினார். ஔவுரங்காபாத் உணவுவிடுதி மேலாண்மை நிறுவனத்தின் ஆட்சிக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். [6] மௌலானா ஆசாத் கல்விச் சங்கத்தின் தலைவராகவும், மௌலான ஆசாத் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும் பாத்திமா இருந்தார்.

பத்மசிறீ விருது பாத்திமா சகாரியாவுக்கு 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்பட்டது. கல்வித் துறையில் தான் மேற்கொண்ட விரிவான பணிகளுக்காக சனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பாத்திமா விருது பெற்றார். [7]

தனிப்பட்ட வாழ்க்கை

இந்திய அரசியல்வாதியும் இசுலாமிய மத போதகராகவும் இருந்த ரஃபிக் சகாரியாவின் இரண்டாவது மனைவியாக பாத்திமா சகாரியா வாழ்ந்தார்.[8] இவர் 2 குழந்தைகளுக்கு மாற்றாந்தாயாக இருந்தார். மூத்தவர், தசுனீம் சகாரியா மேத்தா ஒரு கலை வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளராக மும்பையில் வசிக்கிறார். இரண்டாமவர் மன்சூர் சகாரியா. முன்னாள் சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழிலதிபரான இவர் ஒரு செல்வ மேலாண்மை நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். பாத்திமாவின் மூத்த உயிரியல் மகன் அர்சத்து சகாரியா [9] எட்ச்சு என்ற நிதி நிறுவனத்தை நடத்துகிறார். இளைய உயிரியல் மகன் ஃபரீத் சகாரியா நியூசு வீக் பத்திரிகையின் ஆசிரியராகவும் சி.என்.என். தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராகவும் இருந்தார்.

பாத்திமா 6 ஏப்ரல் 2021 அன்று ஔரங்காபாத்தில் உள்ள கமால்நாயன் பசாச்சு மருத்துவமனையில் கோவிட்-19 [10] தொற்று நோய் காரணமாக இறந்தார்.

மேற்கோள்கள்

  1. "معروف صحافی اور تعلیمی جہدکار پدم شری فاطمہ زکریا کا انتقال، ملک بھر میں غم کا ماحول– Urdu News". 7 April 2021. https://urdu.news18.com/news/nation/west-india-veteran-journalist-fatima-r-zakaria-and-educational-activist-fatima-zakaria-passes-away-in-aurangabad-moh-snm-350726.html. 
  2. "Trust summary: MDD Trust". https://mddtrust.mahaonline.gov.in/InstituteDetails/TrustSummary.aspx?str=/sho7NhKfh7nTQj01CgERq+lUVQzTKZu. 
  3. Prakash, Meghna (12 April 2021). "Watch: Indian-American Journalist Zakaria’s Tribute to His Mother" (in en). The Quint. https://www.thequint.com/coronavirus/watch-indian-american-journalist-zakarias-tribute-to-his-mother. 
  4. "Siblings - Achievers, not Inheritors". the-south-asian.com. February 2003. http://www.the-south-asian.com/feb%202003/Siblings.htm. 
  5. "The new Taj". Arlington, VA: Tata Sons Ltd. 12 November 2001 இம் மூலத்தில் இருந்து 16 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716193301/http://www.tata.com/company/Media/inside.aspx?artid=Ibc33%2Ftt8WA%3D. 
  6. "Board". Indian Institute of Hotel Management, Aurangabad இம் மூலத்தில் இருந்து 2017-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171024191038/http://ihma.ac.in/board.htm. 
  7. "Padma Awards Directory (1954-2009)". Ministry of Home Affairs இம் மூலத்தில் இருந்து 2013-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510095705/http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf. 
  8. "Dr. Rafiq Zakaria remembered". Two Circles. 16 July 2010. http://twocircles.net/2010jul16/dr_rafiq_zakaria_remembered.html. 
  9. "Arshad Zakaria appointed Merrill Lynch co-president". Rediff.com India Limited. 8 October 2001. http://www.rediff.com/money/2001/oct/08zak.htm. 
  10. "Veteran Journalist, Fareed Zakaria's Mother, Padma Shri Fatima Zakaria Dies Aged 85" (in en-GB). 2021-04-06. https://thecognate.com/veteran-journalist-fareed-zakarias-mother-padma-shri-fatima-zakaria-dies-aged-85/. 
"https://tamilar.wiki/index.php?title=பாத்திமா_சகாரியா&oldid=18852" இருந்து மீள்விக்கப்பட்டது