பழனிசெட்டிபட்டி

பழனிசெட்டிபட்டி (ஆங்கிலம்:Palani Chettipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், தேனி வட்டம், தேனி நகரத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில், தேனி - கம்பம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் முல்லை ஆறும், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் கொட்டக்குடி ஆறும் இருக்கிறது.

படிமம்:Palanichettipattidam.JPG
பழனிசெட்டிபட்டி அணை

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 14,879 மக்கள்தொகையும், [1] 4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

பழனிசெட்டிபட்டி அணை

பார்க்க முதன்மைக் கட்டுரை: பழனிசெட்டிபட்டி அணை

பழனிசெட்டிபட்டியின் கிழக்குப் பகுதியில் முல்லைப் பெரியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்காக, இந்த ஊரின் நிறுவனர் என அழைக்கப் பெறும் பழனியப்ப செட்டியார் என்பவரால் அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மேற்பகுதியில் பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு செல்வதற்கான வாய்க்கால் ஒன்றும், சில உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்நிலைப் பள்ளிகள்

  • பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி
  • பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (இந்தப் பள்ளி பழனிசெட்டிபட்டி பகுதியில் இருந்தாலும், இப்பள்ளி இருக்கும் இடம் வீரபாண்டி பேரூராட்சி எல்லைக்குள் இருக்கிறது)

தொடக்கப் பள்ளிகள்

கோயில்கள்

  • பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி கோயில்
  • சவுடேஸ்வரி அம்மன் கோயில்
  • சீனிவாசகப் பெருமாள் கோயில்
  • முருகன் கோயில்
  • அய்யப்பன் கோயில்
  • நாகம்மாள் கோயில்
  • விநாயகர் கோயில்
  • காமாட்சியம்மன் கோயில்
  • வீரகாளியம்மன் கோயில்
  • அரசு நகர் அரசமர பிள்ளையார் கோவில்

அரசு நிறுவனங்கள்

வங்கிகள்

  • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
  • கனரா வங்கி
  • பாரத வங்கி
  • யூனியன் வங்கி
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  • எச்டிஎஃப்சி

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=பழனிசெட்டிபட்டி&oldid=118831" இருந்து மீள்விக்கப்பட்டது