பரிப்பெருமாள்

திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் பதின்மரில் பரிப்பெருமாளும் ஒருவர். மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை இவர் அப்படியே பின்பற்றியதோடு அவரது உரையை அப்படியே எழுதிவிட்டு மேலும் விளக்கம் எழுதுகிறார்.

  • காலம் 13ஆம் நூற்றாண்டு.

இவரது உரை அமைதி - எடுத்துக்காட்டு

அரசன் தன்னைச் சூழ்ச்சியால் கொல்ல நினைப்பாரைத் தானும் சூழ்ச்சியால் கொல்ல வல்லவன் ஆதல்; காரியம் எண்ண வல்லார் தனக்குக் கண்ணாக ஒழுகலான் என்றவாறு.

– இது மணக்குடவர் உரை. இந்த உரையை அப்படியே எழுதிய பின்னர் மேலும் விளக்குகிறார்.

பகைவர் சூழ்ச்சியால் தேற்றாமையால் அவரைத் தோள்வலியால் கோடல் அரிதாம். ஆகலான் சூழ்வார் கண்ணாக ஒழுகவேண்டும் என்றது.

-இது பரிப்பெருமாள் விளக்கம். இதன் குறள்

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். - குறள் 445

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
  • திருக்குறள் உரைக்கொத்து, தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடு, 1983
"https://tamilar.wiki/index.php?title=பரிப்பெருமாள்&oldid=16004" இருந்து மீள்விக்கப்பட்டது