பத்துக் குற்றங்கள்
பத்துக் குற்றங்கள் என்பவை, ஒரு நூலில் இருக்கக்கூடாதவை என நன்னூல் வரையறுத்துக் கூறுவதாகும்.
- குறிப்பிட்ட ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களில் குறைவுபடக் கூறுதல்
- குறித்த ஒரு பொருளை விளக்குவதற்கு தேவையான சொற்களைவிட மிகைப்படக் கூறுதல்
- சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுதல்
- முன்னர் சொல்லிய ஒரு செய்திக்கு முரணாகக் கூறுதல்
- குற்றமுடைய சொற்களை ஆங்காங்கே சேர்த்தல்
- கூறவேண்டிய செய்தியை இதுவோ அதுவோ என்று தயக்கத்தோடு கூறுதல்
- பொருளோடு பொருந்தாத வெறும் சொற்களை அடுக்கி அலங்கரித்துக் கூறுதல்
- சொல்லத் தொடங்கியப் பொருளை விட்டுவிட்டு இடையில் மற்றொரு பொருளைக் குறித்துப் பேசுதல்
- விரிவாகச் சொல்ல ஆரம்பித்து பொருளை போகப்போகச் சொல்நடையும் பொருள் நடையும் தேய்ந்து குறைத்து முடித்தல்
- சொற்களிருந்தும் அவற்றால் பொருட்பயன் ஏதுமில்லாது கூறல்
ஆகிய இப்பத்தும் ஒருநூலுக்கு இருக்கக்கூடாத குற்றங்களாகும்.[1]