பத்தினிப் பெண்

பத்தினிப்பெண் (Pathini Penn) 1993 ஆம் ஆண்டு ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரூபினி, லிவிங்ஸ்டன் முக்கிய வேடங்களிலும் நிழல்கள் ரவி, வி. கோபாலகிருஷ்ணன் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்தியக் காவல் பணி அதிகாரி ஜி. திலகவதி எழுதிய இதே பெயரிலுள்ள புதினத்தின் தழுவலான இப்படம் 1993 சூன் மாதம் வெளியிடப்பட்டது.

பத்தினிப் பெண்
இயக்கம்ஆர். சி. சக்தி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரூபினி
லிவிங்ஸ்டன்
நிழல்கள் ரவி
வி. கோபாலகிருஷ்ணன்
ஜனகராஜ்
ஒளிப்பதிவுவிஸ்வம் நடராஜ்
கலையகம்பெஸ்ட் பிரண்ட்ஸ் கிரியேசன்ஸ்
வெளியீடுசூன் 25, 1993 (1993-06-25)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

கவிஞர் புலமைப்பித்தன் வரிகளுக்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3]

விருதுகள்

இப்படம் திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருதை (இரண்டாம் பரிசு) வென்றது. ஆர். சி. சக்தி சிறந்த வசன எழுத்தாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார்.[4] ரூபினி சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு திரைப்பட விருதை வென்றார். புலமைப்பித்தன் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார்.

வரவேற்பு

பத்தினி பென் 1993 சூன் 25 அன்று வெளியிடப்பட்டது. தி இந்தியன் எக்சுபிரசின் மாலினி மன்னத், "சக்தி உணர்ச்சிகரமான விடயத்தைக் கையாண்டது, கவனமாக பதிவுசெய்யப்பட்ட காட்சிகள், அவரது கடினமான உரையாடல்கள், நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை பெற்றது ஆகியவற்றை மேற்கோள் காட்டி திரைப்படத்தைப் பாராட்டினார்.[5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பத்தினிப்_பெண்&oldid=35199" இருந்து மீள்விக்கப்பட்டது