பட்டியல் (திரைப்படம்)

பட்டியல் என்பது தமிழில் வெளிவந்த அதிரடித்திரைப்படம் ஆகும். இதில் ரௌடிகளாக ஆர்யா மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

பட்டியல்
இயக்கம்விஷ்னுவர்த்தன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
பரத்
பூஜா
பத்மப்பிரியா
கொச்சின் ஹனீபா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
வெளியீடு2006
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்7.4 கோடி

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சிறுவயதிலேயே அனாதைகளாகி விடும் கோஷி (ஆர்யா) மற்றும் செல்வா (பரத்) இருவரும் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான பணத்திற்காக சிறுவயதிலிருந்து கொலை கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். வாய் பேச இயலாத செல்வா தனது ஊரில் கடை நடத்திவரும் ஒரு பெண்ணை காதலிக்கின்றான். இதனைத்தெரிந்து கொண்டு அப்பெண்ணும் இவனைக் காதலித்தாள். பின்னர் ஒரு மாபெரும் கொலையப் பற்றிய திட்டத்தினை கோஷிக்கும் செல்வாவுக்கும் விளக்குகின்றார் அவர்களுக்குப் பணம் கொடுத்து வந்த முதலாளி. அவனின் பேச்சைக்கேட்டே செல்லும் அவர்களில் கோஷிமட்டும் சில காரணத்தால் அங்கு செல்லவில்லை. செல்வாவை அக்கொலையைச் செய்ய அனுப்பினான். பின்பு அக்கொலையினை முடித்தபின் கொலை செய்தவர்களையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்யப்பட்டதை செல்வாவும் கோஷியும் அறியவில்லை. பின்னர் ஏற்படும் பல பிரச்சனைகள் காரணமாக கோஷி கொல்லப்பட்டான். கொலையைச் செய்து முடித்து ஊர் திரும்பிய செல்வா பின்னர் அவனது முதலாளியின் கூட்டாளியினால் கொலை செய்யப்படுகின்றான்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:விஷ்ணுவர்த்தன் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=பட்டியல்_(திரைப்படம்)&oldid=35126" இருந்து மீள்விக்கப்பட்டது