பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா

பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா (Fakkir Mohamed Ibrahim Kalifulla பிறப்பு சூலை 23, 1951) இந்திய உச்சநீதி மன்ற நீதிபதி ஆவார்.

இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்தவர். இவருடைய தந்தை பக்கிர் முகமது நீதிபதியாக இருந்தவர். 1975 ஆம் ஆண்டு ஆக்சுடு மாதம் வழக்குரைஞர் பணியில் ஈடுபட்டார். தொழிலாளர் சட்டத்தில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பெற்றார்.தமிழ்நாடு மின் வாரியத்தில் சட்ட ஆலோசகராக சில காலம் பணியாற்றினார்.2000 ஆம் ஆண்டில் மார்ச்சில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக அமர்த்தப்பட்டார். 2011 செப்டம்பரில் சம்மு காசுமீர உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியாக ஆனார். பின்னர் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக 2012 ஏப்பிரல் இரண்டாம் பக்கலில் பதவியேற்றார். 2016 சூலை 22 வரை இந்தப் பதவியில் நீடிப்பார்.

சான்றாவணம்

http://supremecourtofindia.nic.in/judges/sjud/kalifulla.htm

http://www.nakkheeran.in/users/frmnews.aspx?N=73455 பரணிடப்பட்டது 2012-04-03 at the வந்தவழி இயந்திரம்

இணைப்பு

http://www.dailythanthi.com/2014/11/11075404/Supreme-Court-issues-notice-to-Tamil-Nadu-government.vpf