பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா [1] [2] பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. 14 ஆம் நூற்றாண்டில் வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் என்பவரால் இயற்றப்பட்டது. இது வெண்பாவால் ஆன நூல். பாயிர பெண்பாக்கள் 13. நூல் வெண்பாக்கள் 223. இந்த நூலுக்குப் பதினெட்டு ஓத்து என்னும் பெயரை நூலாசிரியர் சூட்டியுள்ளார். [3]

இந்த நூல் விசிட்டாத்துவைதம் நெறியைக் காட்டுவது. இந்தக் கருத்தை விளக்கும் செய்திகளை கொண்ட பகுதிகள் மட்டும் பகவத் கீதையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடல் - எடுத்துக்காட்டு [4]

இராமானுசரின் மாபாடியத்தைப் பின்பற்றிப் பாடியதாகச் சொல்லும் பாடல்

வேதப் பொருளை விசநற்குத் தேர்மீது
பாதப் புகன்ற புகழ் மாயன் - கீதைப்
பொருள் விரித்துப் பூதூர் மன் பொன் அருளால் வந்த
தெருள் விரிப்பன் நம் தமிழால் தேர்ந்து.

ஆசிரியர் பெயரைக் குறிப்பிடும் பாடல்

சொட்டை மணவாளத் தூ முனிவன் சொல் செறிந்த
சிட்டம் மருவும் தமிழ்ப் பாவால் - கட்டு எழில் சீர்க்
கோமான் அருள் கீதை கூறும் பொருள் உணர்வோர்
சீமான் அடி சேர்வர் சென்று.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 233. 
  2. பதிப்பு - 1906, எஸ். சாமிநாதையர், பி. ஆர் கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் எழுதிய குறிப்புரைகளோடு சீரங்கம் வாணி விலாச அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது
  3. பாரதத்தே காட்டும் பதினெட்டு ஓத்தும் பகர்வார்
    சீர் தழைத்த வெண்பா தெரிந்து. (இந்நூல் பாயிரம்)
  4. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
"https://tamilar.wiki/index.php?title=பகவத்_கீதை_வெண்பா&oldid=17407" இருந்து மீள்விக்கப்பட்டது